எம்ஜியார் காலத்திலிருந்து அதிமுக பெற்ற வெற்றியின் லட்சணம்…

Share

திமுக அப்படி என்ன பெரிய வெற்றி பெற்று விட்டது என்று நாக் கூசாமல் பேசும் நடுநிலை விமர்சகர்களுக்கு எம்ஜியார் காலத்திலிருந்து ஒரு சுருக்கமான வரலாறை சுட்டிக் காட்டலாம் என்பதே இந்த கட்டுரை…

1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் 200. அதில் அதிமுக பெற்ற இடங்கள் 130.

1980ல் அதிமுக போட்டியிட்ட இடங்கள் 177. அதாவது அவ்வளவு இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள் 129.

1984 தேர்தலில் அதிமுக போட்டியிட்ட இடங்கள் 155. இந்திரா கொலையுண்ட சமயத்தில் நடந்த தேர்தல். அத்துடன் எம்ஜியார் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயத்தில் நடந்த தேர்தல். அதற்காக அதிமுக கொடுத்த விலைதான் இத்தனை இடங்கள். அதிலும் வெற்றி பெற்ற இடங்கள் 132தான்.

1989ல் அதிமுக இரண்டாக உடைந்திருந்திருந்தது. அதைக் கணக்கில் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.

1991 தேர்தலில் அதிமுக 168 இடங்களில்தான் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ராஜிவ் கொலையை திமுக தலையில் தூக்கிப் போட்டதால், அதிமுக 164 இடங்களில் வெற்றி பெற்றது. முதல் கூட்டத்திலேயே, ராஜிவ் கொலையை கொச்சைப் படுத்தினார் ஜெயலலிதா.

1996 தேர்தலில் காங்கிரஸ் பிளவுபட்ட போதும், ஜெயலலிதா, 168 இடங்களிலேயே போட்டியிட்டார். ஆனால் அவரே தோல்வியடைந்ததுடன் அதிமுக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

2001 தேர்தலில் அதிமுக 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. தமாகா, பாமக உள்ளிட்ட பெரிய கூட்டணியை அமைத்து, திமுகவை எதிர்த்தார். அந்தத் தேர்தலில் 132 தொகுதிகளை அதிமுக பெற்றது.

2006 தேர்தலில் அதிமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக 61 தொகுதிகளை பெற்றது. அத்தனையும் கொங்கு மணட்லம் கொடுத்த இடங்கள்.

2011 தேர்தலில் 165 தொகுதிகளை மட்டுமே அதிமுக எடுத்துக்கொண்டு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு கூடுதல் இடங்களைக் கொடுத்து போட்டியிட்டது. அதில் 150 தொகுதிகளை அதிமுக பெற்றது.

2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கும் இரட்டை இலைச் சின்னமே கொடுக்கப்பட்டது. இதில் மொத்தமாக அந்தக் கூட்டணி 135 இடங்களை மட்டுமே பெற்றது.

இந்த லட்சணத்தில் திமுக குறைவான இடத்தைப் பெற்றுள்ளதாக கேலி பேசுகிறார்கள் என்பதே கேவலம்.

Leave A Reply