என்னடா இது ஹமாம் விளம்பர நடிகைக்கு வந்த சோதனை!

Share

ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த நடிகையை நெட்டிஸன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

சுத்தம் சுகாதாரம் குறித்தெல்லாம் ரொம்ப பாடம் எடுக்கும் ஹமாம் சோப் விளம்பர நடிகை அப்படி என்னதான் செய்துவிட்டார்?

பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படத்தில் அறிமுகமானவர் திவ்யா பரமேஷ்வரன். இவர்தான் ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். பல விளம்பரப் படங்களில் நடித்திருந்தாலும் இது அவருக்கு பேரைப் பெற்றுக் கொடுத்தது.

கொரோனா விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட இந்த சோப் விளம்பரத்தில், கொரியர் பையனுக்கு ஒரு சோப் கொடுப்பதை தனது சொத்தையே கொடுத்ததைப் போல பெருமையாக நிற்பார்.

சரி இதில் கலாய்ப்பதற்கு என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்?

திவ்யா பரமேஷ்வரன் முண்டா பனியனுடன் திமிரும் உடம்புடன் சிகரெட்டை ஊதித் தள்ளுவதைப் போல ஒரு போஸ் கொடுத்து வெளியிட்ட படம்தான் அவரை கலாய்ப்பதற்கு காரணமாகியது.

நெட்டிஸன்களுக்கு ஒரு படம் கிடைத்தால் போதாதா? உடனே மீம்ஸ்களை வரிசையாக எடுத்துவிட தொடங்கிவிடுவார்களே.

ஹமாம் விளம்பரப்படத்தில் கொரியர் பையன் கொடுத்த பாக்ஸை மகள் திறப்பார். அப்போது பெட்டிக்குள் என்ன இருக்கு அம்மா? என்று கேட்பார்.

இப்போ எதுக்கு பெட்டியை திறந்த? என்று அம்மா கேட்பார். இந்தக் காட்சியை மீம் ஆக தயாரித்திருக்கிறார்கள். பெட்டிக்குள் சிகரெட் பாக்கெட்டுகளும், மதுப்புட்டிகளும் இருப்பதைப் போல உருவாக்கியிருக்கி இருக்கிறார்கள்.

Leave A Reply