கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam

Share

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார்

காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்..

கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..

ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்..

அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்..

காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி வருபவர்..

நீக்காத பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டால் அவரைப் பற்றி எனது நட்பு களில் யாரும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்ற எண்ணத்தால்..

நாம் தமிழர் கட்சியினர் ஒரு விஷயத்தை இலகுவாக மறந்துவிடுகிறார்கள்..

அது திராவிடம் என்பது நிலம் சார்ந்த இனத்தை குறிக்கிறது என்றும் தமிழ் என்பது மொழி சார்ந்த தன்மை என்ற அடிப்படை உண்மையை..

மலையாளம் தெலுங்கு கன்னடம் எல்லாம் தமிழ் தாயின் பிள்ளைகள்.. இதில் எதுவுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல..

பெர்ஷிய டிஎன்ஏ ஆரிய வந்தேறிகள் வரும் முன்னே..

வடக்கில் சிந்து நதியை தாண்டி காஷ்மீர் வரையிலும்..

கிழக்கில் இந்தோனேஷியா வரையிலும்.. மேற்கு அரேபிய கடல் எல்லை வரையிலும்..

தெற்கில் இந்து மகா சமுத்திர தீவுகளை எல்லாம் தொட்டு..

நிலம் சார்ந்த குறியீடு தான் #திராவிடம் என்பதும்

அதன் மொழி தமிழ் தான் என்பதும்..

தமிழுக்குப் பின்னால் வந்த சமஸ்கிருத சொற்கள் மற்றும் சில மொழிகள் வரவால் சில மாற்றங்களுடன் அடைய..

மெல்ல உருவாகின தமிழ் தாய் மொழி இடமிருந்து பிறந்தன மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகள்..

மாநிலங்களின் ஒன்றியம் ஆக அறிவிக்கப்பட்டு பிறந்தது 1947இல் தான் #இந்தியா..

மொழிவாரியாக இந்தியாவின் மாநிலங்களை பிரிப்பது நடந்தது 1954இல் தான்..

சுதந்திரம் பெறும் முன் 200 வருடங்களாக மதராஸ் என பிரிட்டன் ஆட்சியாளர்களால் அழைக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல..

அன்று.. இன்றைய தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த கர்நாடகா கேரளா மற்றும் ஆந்திரா நிலப்பரப்பில் உள்ளவர்களும் தான்..

இதில் பல மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் உம்.. ஐதராபாத் காஷ்மீர் பாண்டிச்சேரி மற்றும் பல சுதந்திரத்திற்குப் பின்னால் இணைந்தவர்கள் தான்..

இவ்வளவு ஏன் சிக்கிம் 1975இல் தான் இந்தியா உடன் ஒரு ஒன்றிய மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்டது..

இப்படி பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக இயங்கிய இந்த நிலப்பரப்பில் புதிதாக மாற்றப்பட்ட மாநிலத்தின் எல்லை கோட்டில் குறியீட்டை வைத்துக்கொண்டு..

வெறித்தனமாக யார் தமிழர் உறவுகளே எனக் கத்திக் கொண்டு இருப்பது அபத்தமாக இல்லையா..
சீமானின் அப்பா செபஸ்டின் கூட மலையாள வழி வந்தவர் தான்..

சீமானின் மனைவி வீட்டாரும் அதுபோல திராவிடத்தின் பிள்ளை மொழிகளில் வேர்களை தாங்கி வந்தவர்கள்தான்..

இதை ஆரிய ஆகமத்தை உவகையுடன் ஏற்றுக்கொண்டு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்திய சீமானால் கூட மறுக்க முடியுமா..

மேலும் என் மொழி தமிழ் என்பதாலே என் இனம் திராவிடம் என்பதால் எனக்கு எந்த பெருமைகளும் வந்துவிடப் போவதில்லை..

ஆனால் எனது நடத்தை மூலம் அதனை எப்படி பெருமையாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்பதே முக்கியமானது..

அண்ணாவைப் படிப்பதால் மொழியறிவு மட்டும் வளராது கண்ணியமும் கூட சேர்ந்தே வரும்.. வளரும்..
மதவெறி எவ்வளவு மோசமானதோ.. ஜாதி வெறி எவ்வளவு கீழ்த்தரமானதோ..

அதைப்போலவே அதீத பச்சைத்தமிழன் பிங்க் தமிழன் ஊதா தமிழன் போன்ற அடங்கா வெறியும்..
நிற்க..

🐝 நார்வே நாட்டின் சமாதான உடன்படிக்கை என்பது எழுத்து தமிழர் வாழ் தன்னாட்சிக்கான திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம்..

அதை சரியாக கையாளாமல் பிரபாகரன் செய்தது மிகப்பெரிய இமாலயத் தவறு..

இலங்கை தமிழர்களுக்கு அவர் இழைத்த மாபெரும் அநீதி அது..

🐝 அவரது தளபதி கருணாவுடன் மட்டுமல்ல மேலும் சிலரை அவர் கொண்ட ஈகோவால் அவர் இலங்கையில் யுத்த களத்தை மட்டுமல்ல யுத்தத்தையும் இழந்தார்…

🐝 மேலும் அன்றைய காலத்தில் நடந்த தேர்தலை அவர் புறக்கணித்து இருக்கவே கூடாது.. அவரின் புறக்கணிப்பு ராஜபக்சேக்கு பெரும் உதவியாக அது அமைந்தது..

சில விஷயங்களை வெளிப்படையாக பேசும் நேரம் வந்துவிட்டது..

இந்தியா அது காங்கிரஸ் ஆளும் சர்க்கார் ஆக இருந்தாலும் அல்லது பிஜேபி ஆளும் சர்க்கார் ஆக இருந்தாலும் இலங்கைக்கு அதன் ஆளும் அரசுகளுக்கு தார்மீக நண்பனாகவே இருந்து வந்தது.. இருக்கும் செய்கிறது..

இந்தியாவுக்கு இலங்கை அரசை ஆதரிக்க பௌதீக ரீதியான நிர்ப்பந்தம் … வேறு வழியில்லை..

ஆனால் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஏன் விடுதலைப்புலிகளை அங்கீகரிக்கவில்லை மாறாக இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்தார்கள் என்ற கேள்வியை நாம் எடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்..

இதற்கு உலகெங்கும் கூறப்பட்ட பல காரணங்களை சில கேள்விகள் ஆக்கி உங்கள் முன் வைத்துள்ளேன்

🐝 வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை உள்வாங்கி இலங்கை முஸ்லீம் மதத்தின் இனவழிப்பை முன்னெடுத்தார்..

🐝 வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஊறி இருந்தவர்கள் முக்கியமாக சந்திராசாமி சுப்பிரமணியசாமி போன்றவர்கள் சித்தாந்தத்தை உள்வாங்கி ராஜீவ்காந்தியை கொல்லும் கருவியாக சில விடுதலைப்புலிகளை கூலிப்படையாக மாற்றினார்..

🐝 வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தங்களின் கூட்டணி கட்சிகளை தின்று விழுங்கும் ஆர்எஸ்எஸ் மரபை உள்வாங்கி அதுபோலவே தனது சக தமிழர்கள் குழுக்களை அதன் தலைவர்களை எல்லாம் கொன்றொழித்தார்..

இதற்கு விடையை தேடினால் 40 உலக நாடுகளின் கோபம் ஏன் விடுதலைப் புலிகள் பிரபாகரன் மீது திரும்பியது என்ற உண்மையை நாமும் அறியக்கூடும்..

இப்படி தனது அழிவுக்கு மட்டுமல்ல.. விடுதலைப்புலிகளின் மொத்த அழிவுக்கும் மட்டுமல்ல..

தன்னை நம்பியிருந்த பல்லாயிர கணக்கான ஈழத்தமிழர்கள் அழிவுக்கு தானே காரணமாக அமைந்தவர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

சிங்கள அரசின் விடுதலைப்புலிகள் அழிவில் அடங்கிய ஈழத்தமிழர்கள் மரணமும் மற்றும் முள்வேலி முகாம் மிகவும் துக்ககரமான நிகழ்வு..

அதை சிங்கள அரசு நடத்திய விதம் மிகவும் படு பயங்கரமாக இருந்ததால்..

இதனைக் கண்டித்து 2009ல் Indian Asian Sri Lanka chamber of commerce என்ற அமைப்பிலிருந்து எனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தேன்..

மீண்டும் நிதானத்தை தொலைத்த நண்பர் விட்ட இடத்திலேயே வருகிறேன்..

சாட்டை படத்தை முகப்பில் வைத்திருப்பவர்கள்..

மற்றும் இன்னமும் எந்த ஆதாரமும் இல்லாத ஒருவனது பதிவுகளை திரும்பத்திரும்ப கிளறிவிடும் #பாஜக வின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலரை..

அதில் முக்கியமாக அந்தக் கட்சியின் சூர்யா மற்றும் நடிகை மால்வியா போன்றவர்களை பார்க்கும்போது பரிதாபமாகத்தான் உள்ளது..

காரணம் சாட்டை மற்றும் கிசாமிகள் சட்ட வளையத்துக்குள் பலமாக சிக்கிக் கொண்டவர்கள்..

நுணலும் தன் வாயாலே கெடும் என்பதுபோல.. they fallen to their own trap and become habitual offenders..

இருவர் மீதும் 2 வழக்குகள் ஏற்கனவே பாய்ந்த நிலையில்.. மேலும் பல புகார்கள் அவர்கள் மீது குவிவதால்..

அவர்களுக்கு விடுதலை என்பது தள்ளிப்போகும்..

மேலும் தமிழ்நாடு சிறைச்சாலை இனி அவர்களுக்கு கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் தனிமனிதர் மரியாதையும் கற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன்..

மேலும் எச் ராஜா ஷர்மா மற்றும் சீமான் போன்றவர்கள் காட்டுக்கத்தல் கத்தி அடுத்தவர்களை கேவலமாக பேசுவதை வீரமாக எண்ணி கொள்கிறார்கள்..

ஆனால் வீரம் என்பது நிச்சயம் அதுவல்ல.. ஆனால் கண்ணியத்துடன் கருத்துக்களை எதிர்கொண்டு பேசுவதில் மட்டுமே உள்ளது..

சரி.. நம் நட்பில் இதுவரை கண்ணியம் காத்த அவர் திரும்பத் திரும்ப கோபத்துடன் எமோஷனலாகி கேட்டதால் வேறுவழியின்றி..

இதோ அவர் ஆசைப்பட்டபடி ஆதாரம்..

என்டிடிவி மட்டுமல்ல.. வேலுப்பிள்ளை உடன் இலங்கையில் வேலை பார்த்த அவரின் மகன் சொன்ன ஆதாரத்தையும்.. மற்றும் எக்னாமிக்ஸ் டைம்ஸ் தருவித்த ஆதாரத்தையும் கொடுத்தது போக..
இன்னும் பல ஆதாரத்தை வழங்கிட முடியும்.. ஆனால் நமது நோக்கம் யாருடைய பூர்வீகத்தை ஆராய்வது அல்ல…

மாறாக வாழ்க்கை என்னும் பாதையில் மறுமலர்ச்சி கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்வது..

புத்திசாலிகள் புரிந்துகொள்ளவாரகள் என்பதால் இதுவே போதும்..

போதும் என்பதால் பின்வாங்கி விட்டேன் எனக் கொள்ளலாகாது..

வலிமையான ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அடிபணியாதவன்..

ஜெயலலிதா போலவே சோவின் மர்ம மரணத்தினால் பலனடைந்த துக்ளக் குருமூர்த்தி மூலம்..

ஜாதியை காட்டி தினத்தந்தி நிறுவனத்திடமிருந்து அதை லீசுக்கு எடுத்து கொடுத்த தற்போதைய டூப்ளிகேட் வெர்ஷன் விசிலடிச்சான் செல்லங்கள் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து விட மாட்டேன்..

திமுகவை தொடர்ந்து எதிர்த்து வந்த ஒரிஜினல் நாம் தமிழர் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட உண்மையை ஏன் மறைக்கிறார்கள் தற்கால டுப்ளிகேட் #ntk என்ற கேள்வியை உங்கள் முன் வைத்து..

வரலாறு முக்கியம்.. அதை அறியாமல் குருமூர்த்தி தரும் ஆதரவை நினைத்து ஆட்டம் போடக்கூடாது என்றும்..

முடங்கிய ஒரிஜினல் நாம் தமிழர் கட்சியை லீசுக்கு எடுத்து கொடுத்த ஆர்எஸ்எஸ் வாலா குருமூர்த்தியே தற்போது சிவசங்கர் பாபா போல ஜெயேந்திரர் கைது போது ஓடி ஒளிந்த பயந்தாங்கொள்ளி தான் என்றும்..

ஆதலில்..

#திராவிடம் நம் இனம் ..

#தமிழ் நம் மொழி..

இதனை இந்தி திணிப்பின் மூலமும் சமஸ்கிருத அர்ச்சனை மூலமும்..

யாரும் அழிக்க முற்பட்டால் அதை காப்பதே நம் உயிர் மூச்சாக இருக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கோரி..

ஆதாரத்தை காட்டு என வம்பு சண்டைக்கு இழுக்காதீர்கள் என வேண்டுகிறேன்..

ஆதாரம் இல்லாமல் அடிச்சு விட கண்டதையும் உளற அடியேன் கிசாமியும் அல்ல சாட்டையும் இல்லை..

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவனாக இருந்த 1964 காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற என் தந்தை சங்கர் ராம் என்பதால் அதை பயன்படுத்தி நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டவன் அல்ல..

என் தாய் வழி தாத்தா செங்கோட்டை கரையாளர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மற்றும் இன்று இருக்கும் சத்தியமூர்த்திபவன் கட்டிடத்தை காமராஜருடன் சேர்ந்து நிறுவியவர் என்பதாலே காங்கிரஸில் அடியேனே பலமுறை அழைத்தும் இதனை பயன்படுத்தி இணைத்து கொண்டவனும் அல்ல..

மாறாக #அண்ணா வை படித்து முக்கியமாக அவர் பாராளுமன்ற அவைகளில் உரையாற்றி உள்ள மொழி அறிவின் சாரத்தை வியந்துபவன்.

அதில் இழையோடும் அவர் கற்பித்த கண்ணியத்துடன் முகநூலில் இயங்க விரும்பும் ஒரு சாமானியன் ..
ஆதாரம் 1: Ndtv https://youtu.be/q3BTaZmdh_Q
ஆதாரம் 2: Economic times
https://m.economictimes.com/…/articleshow/4491686.cms
ஆதாரம் 3: பிரபாகரன் தந்தையுடன் வேலைபார்த்தவரின் மகன் ஆனந்தசீகரன் கொடுத்த சாட்சி ..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி 🙏
#சவெரா
#பிரபாகரன் #Pirabakaran #Ltte #Eelam #tamilnadu #தமிழ்நாடு #திவிரவாதம் #இனப்படுகொலை #இலங்கை #SriLanka #SriLankaNews #naamtamilarkatchi #naamthamizhar #NaamTamilar #seeman #சீமான் #ஶ்ரீலங்கா

Leave A Reply