கலைஞர் ஏன் 2002க்கு பிறகான வாழ்க்கை வரலாறை எழுதவில்லை? – LR Jagadheesan

Share

கலைஞரை வர்ணிக்கும்போது இந்தியாவின் நம் சமகால philosopher-king அவர் என்பார் நண்பர் A S Panneerselvan. (கலைஞர் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய பன்னீர்செல்வன்).

நேரு, அண்ணா, கலைஞர் என்கிற வரிசை அது. அதாவது வலுவான சிந்தனையாளன்/கொள்கையாளனே ஆட்சியாளனாகவும் இருப்பதை குறிக்கும் சொல் philosopher-king. அதில் கவிஞனாகவும் இருந்தவர் கலைஞர்.

உண்மையான கவியுள்ளத்தின் தனித்துவம் என்பது வெறும் கவிதை எழுதுவது மட்டுமல்ல. அதன் அடிப்படை சிந்தனையே அதிகாரத்துக்கு எதிராகவே இருக்கும். இயங்கும். சமூகத்தை இயக்கும். குறைந்தபட்சம் இயக்க முயலும். கலைஞரின் கவிதைகள் பலதிலும் காலம்தோறும் அந்த கலகக்குரல் வெளிப்பட்டே வந்திருக்கிறது.

அத்தோடு அவரது சாகாவரம்பெற்ற திரைப்பட வசனங்கள் பலதிலும் அதன் சாயலை நீங்கள் இன்றும் பார்க்கமுடியும். இந்த ஒரே ஒரு ஒற்றைக்கோணத்தை மட்டுமே கொண்டு ஒரு ஆய்வாளர் ஆய்வுசெய்வாராயின் அது ஒரு PhD Thesis ஆகும். அவ்வளவுக்கு செறிவானவை அவரது அதிகார எதிர்ப்பு சிந்தனைச்சிதறல்கள்.

கலைஞரின் கவித்துவம் அவரது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, அவர் பிறருக்கு சூட்டிய பட்டங்களிலும் தன் படைப்புகளுக்கு வைத்த தலைப்புகளிலும் கூட வெளிப்பட்டிருக்கிறது. அதிலொன்று தன் சுயசரிதைக்கு அவர் சூட்டிக்கொண்ட “நெஞ்சுக்கு நீதி” என்கிற தலைப்பு. அது கவித்துவமானது மட்டுமல்ல ஆழமான பொருள் கொண்டதும் கூட. ஒருவர் எப்படியும் வாழலாம். வெல்லலாம். ஆனால் இறுதியில் தன் நெஞ்சத்துக்கு நீதியாக, அதாவது உண்மையாக, இருந்தானா/நடந்துகொண்டானா/வாழ்ந்தானா என்கிற கேள்விக்கு ஒருவர் சொல்லக்கூடிய நேர்மையான பதிலே அவரது வாழ்வின் நேர்மையை அளப்பதற்கான உண்மையான அளவுகோள்.

அந்த வகையில் கலைஞருக்குள் இருந்த கவிஞன் தன் சுயசரிதைக்கு சூட்டிக்கொண்ட தலைப்பு தான் நெஞ்சுக்கு நீதி என்கிற அற்புதமான ஆழமான தலைப்பு.

ஒருவகையில் கலைஞர் என்கிற கவிஞன் கருணாநிதி என்கிற ஆட்சியாளனுக்கு சொன்ன கட்டளையாகவும் நாம் அதை புரிந்துகொள்ளலாம்.

“மன்னனே, நீ என்னவாகவும் இரு, ஆட்சிசெய். ஆனால் உன் நெஞ்சுக்கு நீதி செய்வதாகவே உன் ஆட்சி இருக்கவேண்டும்” என்கிற கவியின் கட்டளையாகவும் அதை நாம் உருவகிக்கலாம். தவறில்லை.

அப்படிப்பட்ட அற்புதமான ஆழமான தலைப்பைக்கொண்ட தன் சுயசரிதையை கலைஞர் ஏன் முடிக்காமல் விட்டார் என்கிற கேள்வியை நெடுநாள் நண்பரும் நானும் கேட்டுக்கொண்டோம்.

கலைஞரின் நெஞ்சுக்குநீதி மொத்தம் ஆறுபாகங்கள் வந்தது. அதில் 2002 ஆண்டுவரையிலான அவரது வாழ்வு, சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள் அதில் அவரது சொற்களிலேயே இருக்கிறது. அதன் பிறகு அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை.

இயற்கை அனுமதித்தால் ஒன்பதாம் பாகமும் எழுதுவேன் என்றுதான் அவர் 2013 ஆம் ஆண்டு சொன்னார். https://www.facebook.com/470872276258316/posts/705453119466896/?d=n

இயற்கையும் அனுமதித்தது. 2002 ஆம் ஆண்டுக்குப்பின் அவர் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கும் வந்தார். சாதனைகள் பல செய்தார். 16 ஆண்டுகாலம் உயிரோடும் இருந்தார்.

ஆனால் 2002 ஆண்டுக்குப்பின்னரான மீதமுள்ள 16 ஆண்டுகால கலைஞரின் சாதனைகள் போராட்ட வரலாறு இன்னும் எழுதப்படாமல் மிச்சமிருக்கிறது. அவற்றை கலைஞர் ஏன் எழுதவில்லை என்கிற கேள்விக்கு யாரிடமும் முழுமையான விடை இல்லை. அந்த நண்பரிடமும் கூட. அவருக்கு நான் சொன்ன பதில் இது.

“இதை நாம் இன்னொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். அல்லது நான் புரிந்துகொள்கிறேன். புரிந்துகொள்ள முயல்கிறேன். கலைஞர் தலைப்பில் சொன்னபடி தன் நெஞ்சுக்கு முழுமையாய் நீதி செய்ய முடிந்தகாலம் என்பது 2002 ஆம் ஆண்டோடு முடிந்துபோனதால் அதற்க்குப்பின் அவர் ஆட்சி செய்தாலும் சாதனைகள் பலசெய்தாலும் சோதனைகள் பலதை முறியடித்திருந்தாலும் அந்த 16 ஆண்டுகளில் தன் நெஞ்சுக்கு முழுமையாய் நீதி செய்ய முடியாத கலைஞரின் கவியுள்ளம் அதற்குப்பின்னான தன் வாழ்வை தன் கையால் தன் வார்த்தைகளில் பதிய மறுத்ததாகவும் கூட நாம் இதை புரிந்துகொள்ள முடியும்.

ஏனெனில் இந்தியாவின் கட்டக்கடைசி Philosopher King Kalainjar Mu Karunanidhi. Philosopher கலைஞர் started his slow death in 2002; But the King கருணாநிதி endured, ruled, achieved many a thing fought valiant battles, lost some, won some. But he could not do full justice to his own self, ie inner poet/philosopher after 2002. So the Poet within him stopped writing the biography of the King. And the King could not force him either. Instead, he too seems to have agreed with that in a way. So கலைஞரின் நெஞ்சுக்கு நீதி stopped at 2002.”

இது என் தனிப்பட்ட ஒருவனின் புரிதல் மட்டுமே. இதுவும் முழுமையானதென்றோ இதுதான் சரியென்றோ சொல்லவரவில்லை. இதுவே என் பார்வை. அதற்குமேல் இதில் விவாதிக்கவோ எதையும் நிலை நிறுத்தவோ ஒன்றும் இல்லை.

Leave A Reply