விண்வெளியில் மிதக்கும் குப்பைகள்: களமிறங்கும் ஜப்பான்
ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி என்ற ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி நிறுவனமும் கியோட்டா பல்கலைக்கழகமும் இணைந்து பூமியின் தீவிர சூழல்களில், பல்வேறு வகையான மரங்களை பயன்படுத்தி அவற்றின் பயன்பாடு குறித்த தரவுகளைத் திரட்டும். விண்வெளியில் ஒவ்வோர் ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான…