Daily Archives: April 1, 2020

கொந்தளிக்கும் இந்தியாவின் மறுபக்கம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்புகிறோம். உத்தரப்பிரதேசத்திலிருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நடந்தே செல்லும் நிலையை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு?

உயிரோவியமாய் நடைபயணத் துயரங்கள்!

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து வாகனப்போக்குவரத்து இல்லாமல், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பிள்ளைகுட்டிகளோடும், மூட்டை முடிச்சுகளோடும் புலம்பெயர் மாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய துயரத்தை சுனில் அபிமான் அவச்சார் என்ற ஓவியர் உயிரோவியமாக  வரைந்துள்ளார்.  இவர் கவிஞரும், கல்வியாளரும் ஆவார். இதயத்தை பிசையும் இந்த கொடூரமான பயணத்தை பல்வேறு மீடியாக்களும் செய்திகளாக பதிவுசெய்துள்ளன. இந்த பயணத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை ஊரடங்கு சாப்பிட்டுவிட்டது. அவர்களுடைய தங்குமிடத்தை பறித்துக்கொண்டது. தலித் வகுப்பைச் சேர்ந்த கவிஞரும் ஓவியருமான அவச்சார், மும்பை…

உங்கள் தவறை மறைக்க இஸ்லாமியர்கள்தான் கிடைத்தார்களா?

தமிழகத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற சிவராத்தி நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் மாநாட்டில் வெளிநாட்டினர் பங்கேற்ற நிகழ்வு எதிர்விமர்சனமாக உருவெடுத்தது. அந்த மாநாடு மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதிவரைதான் நடைபெற்றது. ஆனால், மாநாடு முடிவடைந்து 15 நாட்கள் ஆன நிலையில், மார்ச் 30 ஆம்…

விண்வெளியில் வளரும் கீரைகள்…!

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களிம் உணாவாக உட்கொள்ளு வார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு…

செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு

தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், வானளவுக்குப் புகை எழுப்பும் சூளை இல்லாமல், சித் தாள்கள் யாருமே இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்தச் செங்கற்களைப் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கின்றனர். பாக்டீரியாவால் நோய் தான் வரும். செங்கல் வருமா?…

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு.. சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு செய்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் 3,698 களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 34 ஆயிரத்தை நெருங்கியது

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 34 ஆயிரத்தை நெருங்குகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் நாளை முதல் 1000 மற்றும் ஒரு மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

மக்கள் வெளியேறும் செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த பயணத்தில் அவர்களுக்கு போதுமான உணவு வசதியோ, தங்கும் வசதியோ செய்துதரப்படவில்லை.

டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 67 பேருக்கு கொரோனா உறுதி: ஒரே நாளில் 57 பேருக்கு நோய் கண்டுபிடிப்பு

தலைமறைவாக இருந்த 125 பேரிடம் சோதனை* 14 நாள் வெளியே சுற்றியதால் சமூக பரவல் அபாயம் * மேலும் 616 பேரை தேடும் பணி தீவிரம் * புதுடெல்லியில் நடந்தமத நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.* இவர்களில் 515 பேர்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். * அதில் 67 பேருக்கு கொரோனா நோய் உறுதி.* டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்க அரசு வேண்டுகோள்.சென்னை: புதுடெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 67…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு….பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக…