Daily Archives: April 9, 2020

நோய்கள் பரப்பியதாக இந்துக்களை விரட்டிய அமெரிக்கர்கள் – வரலாறு சொல்லும் பாடம்!

இஸ்லாமியர்கள் கொரோனா நோயைப் பரப்புவதாக இந்துமத வெறியர்கள் இப்போது செய்திகளை பரப்புகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இதே செய்தித்தாள்களும், அறிவுஜீவிகளும் இணைந்து இதேபோல நஞ்சுகலந்த பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். ஆக, நீண்டகாலமாகவே, இத்தகைய இனவெறி, மற்றும் மதவெறி விஷம் கலந்த பொய்ச் செய்திகள் அரசியலின் முக்கிய அம்சமாக தொடர்கிறது என்பதை ஆதாரபூர்வமாக இந்தக் கட்டுரை அலசுகிறது. இன்றைக்கு கொரோனா தொற்று நோயை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் பரப்பிவிடுவதாக தொடர்ந்து பொய்ச் செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன. இந்தக் காலத்தில் நடப்பதைப்…

இந்தியாவில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன. மருத்துவர்கள், காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து கொரோனா பாதித்தவர்களை மீட்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளதால் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்…

23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000 விதம் டெபாசிட் செய்துள்ளார் – சல்மான்கான்

பாலிவுட்டில் சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் சுமார் 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து அவர்களுடைய யூனியன் மூலம் வங்கி கணக்கை பெற்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 அவர்களுடைய வங்கி கணக்கில் தானே டெபாசிட் செய்துள்ளார். 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000…

பிரேசில் அதிபர் உணர்ச்சிபூர்வ கடிதம்!!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்திற்கு முக்கிய பங்கு இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்ட நிலையில், அதன் வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது இந்தியா.  ஆனால் ஏற்றுமதி நிறுத்துவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் இந்தியவிடமிருந்து அந்த மருந்தை கேட்டிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப்பின் அதிருப்தி பேச்சை தொடர்ந்து அமெரிக்காவிற்கு மருந்து அனுப்ப அனுமதித்தது இந்தியா. இந்நிலையில் பிரேசில் அதிபர் போல்சனேரோ பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராமாயணத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர் அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு…

சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் – அசத்தும் சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருபவர்களை சோதனை செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கியாஸ்க் செயல்பாட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சோதனையை எளிதாகவும் அதேசமயம் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE) தேவைப்படாத கியாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கியாஸ்க் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைக்குப்பிறகும், கையுறைகள், சானிடைசரின் உதவியுடன்…

இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 1138 பேரும், தமிழகத்தில் 738 பேரும், டெல்லியில் 669 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 149லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 411 லிருந்து 473 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு பணியில் உயிர்விட்ட காவலர் – மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அருண்காந்தியின் மறைவிற்கு திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்…