Monthly Archives: May, 2020

மோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் சிக்கியிருக்கும் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்திற்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் பேருந்து மற்றும் ரயில் வசதி ஓரளவுக்கு இருந்தாலும் அதில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பலர் நடந்தே சென்று விற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த ஊரான தஞ்சை செல்வதற்காக குடும்பத்துடன் முயன்ற போது அவருக்கு…

தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22333ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்மேலும். இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள்…

மன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.…

கரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும்? – மணிரத்னம் பதில்

கரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும் என்ற கேள்விக்கு மணிரத்னம் பதிலளித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. பல முன்னணி இயக்குநர்களால் திட்டமிடப்பட்டுக் கைவிடப்பட்ட இந்தப் படத்தை தற்போது மணிரத்னம் இயக்கி வருகிறார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, ஜெயராம், ரியாஸ்கான் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்து வருகிறது. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து…

சின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்

சின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதில் அதிகபட்சமாக 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் இது போதாது எண்ணிக்கையை உயர்த்தி அனுமதி அளிக்க வேண்டும் என்று மீண்டும் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 20 என்பதை 60 ஆக அதிகரித்து நேற்றைய…

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை…முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்து, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த…

வாழைத்தண்டு வடை

தேவையானவை: வாழைத்தண்டு – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) பொட்டுக்கடலை – 150 கிராம் நறுக்கிய வெங்காயம் – 2 நறுக்கிய பச்சை மிளகாய் – 3 துருவிய கேரட் – ஒன்று எண்ணெய், சோம்பு, உப்பு – தேவைக்கேற்ப இஞ்சி – ஒரு சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். நறுக்கிவைத்த வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, துருவிய…

மெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வருகிறார். அந்த வகையில் இவரின் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் விரைவில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இதை பாண்டிராஜே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”

30 மே சியோல், உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவியுள்ள இக்காலகட்டத்தில் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பாதிப்புகள் இருந்தாலும் தென் கொரிய அரசாங்கம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தாமல் மிகச்சிறப்பாக நோய் தடுப்பு, விழிப்புணர்வு வள மற்றும் ஆளுமை மேலாண்மை நடைமுறைகளை கையாண்டு நோய் பரவுவதைத் சிறப்பாக தடுத்து வருவதை உலகறியும். உள்நாட்டு போக்குவரத்து தடைபடாமல் வெளிநாட்டு போக்குவரத்து மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் அதிக தொற்று கண்டறியப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. இன்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,776 பேர் மருத்துவமனையில்…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: நாளை காலை அனைத்து மொழி செய்தித்தாள்களிலும் வெளியாகிறது

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டபோது பொது ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி, அதன் மூலம் தெரிவித்தார். அதன்பிறகும் ஒன்றிரண்டு முறை பேசினார். 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது அவர் உரையாற்றவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை மறுநாளுடன் (மே 31-ந்தேதி) 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதன்பின் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இன்று பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா…

இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில்,…

1 2 3 17