Daily Archives: May 18, 2020

அது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்! – ப.சிதம்பரம் ட்வீட்

கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார். பல அரசியல் கட்சி தலைவர்களும், பணம் மக்களிடம் நேரடியாக சென்று சேர வேண்டும். அது தான் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று வலியுறுத்தினர். ஆனால், அனைத்தும் வங்கிக் கடன்கள் வகையிலேயே அறிவிக்கப்பட்டன. சிலரோ, ஏற்கனவே…

என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணம் என்னனு தெரியுமா..?

அடிதடி, சண்டை என பெரிய பிரச்னைகளுக்கே போலீஸ் ஸ்டேசனுக்கு போக தயங்கி தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்பவர்கள் அதிகம். ஆனால் இங்கே 8 வயதே ஆன சிறுவன் ஒருவன் தன்சொந்த அக்காவின் மீது போலீஸில் புகார்கொடுக்கச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் உமர் நிதர். எட்டு வயதான இந்த சிறுவன் மூன்றாம்வகுப்பு படித்துவருகிறான். ஊரடங்கு காரணமாக இந்த சிறுவனால் விளையாடப் போகமுடியாமல் இருந்துள்ளார். உமர்நிதரின் அக்காவும், அவரது தோழிகளும் சேர்ந்து இவரது வீட்டில் தினமும்…

பிரபுதேவா பாடலுக்கு டேவிட் வார்னர் டிக் டாக் டான்ஸ்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தமிழ் பாடலுக்கு நடனமாடியுள்ளார். டிக்டாக் உலகமே தனி. வெளியில் என்ன நடந்தாலும், டிக் டாக் யூசர்கள் தங்களை வீடியோ போடுவதில் பிஸியாக வைத்துக் கொள்வார்கள். அதோடு சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயனர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது,…

பிணந்தின்னும் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளோ?

நண்பர்கள் இருவரும் குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி தினசரிக் கூலிக்கு வேலை செய்துவந்தவர்கள். ஒருவர் நூல் தொழிற்சாலைத் தொழிலாளி, இன்னொருவர் விசைத்தறித் தொழிலாளி. ஊரடங்கால் வருமானம் இழந்த அவர்களின் கையிருப்புப் பணம் உணவுக்கே செலவாகிக்கொண்டிருந்தது. ஊரடங்கு இப்போதைக்கு முடியப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர்கள், விவசாயத் தொழிலாளர்களாகப் பிழைத்துக்கொள்ளலாம் என்று உ.பி. மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு லாரி பிடித்துத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். லாரியில் வேறு சிலரும் இருந்தார்கள். ஒரு நண்பனுக்குத்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 ஆகியது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5242 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 3029 பேர் உயிரிழந்த நிலையில், 36,824 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக…

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்..: செங்கோட்டையன் தகவல்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளிக்காக ஒரு பேருந்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறங்க…முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால், டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம்தேதி, மேட்டூர் அணையின்…

மே 31 வரை பொது முடக்கம்: தளர்வு எந்தெந்த மாவட்டங்களில்?

கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் இருந்த பொது முடக்கம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளுடன் 4-வது பொது முடக்கத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இது நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தளர்வுகள் கொரோனா பாதிப்பு நிலவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த…