Daily Archives: May 31, 2020

மோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் சிக்கியிருக்கும் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்திற்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் பேருந்து மற்றும் ரயில் வசதி ஓரளவுக்கு இருந்தாலும் அதில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பலர் நடந்தே சென்று விற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த ஊரான தஞ்சை செல்வதற்காக குடும்பத்துடன் முயன்ற போது அவருக்கு…

தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22333ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்மேலும். இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள்…

மன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.…

கரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும்? – மணிரத்னம் பதில்

கரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும் என்ற கேள்விக்கு மணிரத்னம் பதிலளித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. பல முன்னணி இயக்குநர்களால் திட்டமிடப்பட்டுக் கைவிடப்பட்ட இந்தப் படத்தை தற்போது மணிரத்னம் இயக்கி வருகிறார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, ஜெயராம், ரியாஸ்கான் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்து வருகிறது. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து…

சின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்

சின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதில் அதிகபட்சமாக 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் இது போதாது எண்ணிக்கையை உயர்த்தி அனுமதி அளிக்க வேண்டும் என்று மீண்டும் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 20 என்பதை 60 ஆக அதிகரித்து நேற்றைய…

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை…முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்து, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த…