Daily Archives: June 5, 2020

இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார்.
ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான்.
ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம்,
‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான்.
அவரும் ‘ஆம்’ என்றார்.
உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது.
அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார்.
‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.

கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் ரப்பர் தோட்ட பணியாளர் கைது…

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ரப்பர் தோட்ட பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்ற போது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள…

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு முடிந்து ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்படும் சூழலில், அவை பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜூன் 8 முதல் மால்கள், ஹோட்டல்கள் இயங்க ஆரம்பித்தபின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.…

17,723 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா, இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பிரபலங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுகின்றனர். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக விஜய் தேவரகொண்டா, ‘விஜய் தேவரகொண்டா’ அறக்கட்டளையைத் திறந்தார். தற்போது இதன் மூலம் 17,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.…

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் கண்டனத்திற்குரியது; மேலும் ஆறு மாதங்களுக்காவது சலுகை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது; முந்தைய மாத கட்டணங்களைப் “பேரிடர் நிவாரணமாக” அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு” மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் “பகல் கொள்ளை”யாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து…

ஐ.நா. நல்லெண்ண தூதராக சலூன் கடைக்காரர் மகள் தேர்வு!

ஐ.நா.வின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது. 13 வயதான நேத்ரா தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்காக கொடுத்துள்ளதை ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்த நிலையில் நிலையில், ஐ,நா தற்போது நேத்ராவை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழக மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ஜுன் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த ஐசிஎம்ஆரின் அங்கமான தேசிய…

காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்: நெல்லை பேருந்துகளில் பயணிகள் கூட்டம்

கட்டுப்பாடுகள்கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாமல் இருந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்குகின்றன. நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகங்கள் பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகளை இயக்கப்படுவதாகவும், 60 சதவீத பணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தமிழகத்தின்…

திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் 80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு கல்லீரல் பிரச்ச்னையும் இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி…

இதுதான் ஊரடங்கை செயல்படுத்தும் லட்சணமா? – ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 27,256, சென்னையில் மட்டும் 18,693. கோடம்பாக்கம், இராயபுரம்,…

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காவல்துறை, மீன்வளத்துறை கட்டுப்பாடுகளால் 10-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தைத் தாண்டியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (05/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 2,26,770 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075- லிருந்து 6,348 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை…