Daily Archives: June 11, 2020

சுஸ்ருதா – Indian scientists series – 1

ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து இலையைப் பறித்தார். அதைக் கொண்டு வழிப்போக்கனின் மூக்கை அளவெடுத்தார். பின்னர், சுவரில் இருந்த கத்தியை எடுத்து தீயில் சிறிது நேரம் வாட்டினார்.
அந்தக் கத்தியால் வழிப்போக்கனின் கன்னத்தில் இருந்து சிறிதளவு தசையை வெட்டி எடுத்தார். அவன் முனகினான்.

இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக தடைபட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கும்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வாக்குச் சாவடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல்…

கொரோனா தடுப்பூசி

இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு விஷயம் இருக்கும் என்றால் அது கொரோனாவுக்கான தடுப்பூசிதான். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐம்பது லட்சம் பேர் வரை இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளோடு இந்தியாவும் இணைந்து இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் சவாலில் இறங்கியுள்ளது. உலகம் முழுதும் உள்ள 110 நிறுவனங்கள் கடந்த நான்கு மாத காலமாக இதற்காகப் போராடி வருகின்றன. சீனா தயாரித்துள்ள இந்த ‘சினோவேக்’ (Sinovac)…

நெல்லையில் கர்நாடக வங்கி கிளையின் உதவி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லையில் கர்நாடக வங்கி கிளையின் உதவி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வங்கி கிளை மூடப்பட்டது. கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கமானது உலக நாடுகள் பலவற்றை திணறடித்து வருகிறது.

கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது; சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்க…

இனிமேலாவது ஊர் பெயரை சரியா எழுதலாம்! – திருமாவளவன் பாராட்டு

தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் தமிழக ஊர்கள், மாவட்டங்கள் பெயரை எழுத வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு திருமாவளவன் அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ஊர்கள் மற்றும் மாவட்டங்கள் பெயர் நல்ல தமிழிலேயே இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் சொல்லாடல் சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இந்நிலையில் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர்…

இயற்கையான முறையில் பொடுகு தொல்லையை போக்கும் குறிப்புகள்

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும். தேங்காய் எண்ணய்யுடன் வேப்ப எண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும். நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து…

அதிகாலையில் சென்னையில் மழை: கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்த பொதுமக்கள்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கோடையின் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சற்று கோடையில் வெப்பம் குறைந்து ஒரு சில இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் உச்சத்தில் இருந்தது. 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்ததால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும் சிரமத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

திருமணமும் துறவறமும்! PERIYAR LIFE HISTORY – 2

திருமணமும் துறவறமும் வசதியான குடும்பத்து இளைஞர் என்றாலே அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் கும்மாளமிடத்தான் செய்யும். இரவு ராமசாமி எப்போது மண்டியைப் பூட்டுவார் என்று நண்பர்கள் காத்திருப்பார்கள். கடையைப் பூட்டியவுடன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொழிலாளிகளின் வீடுகளுக்கு செல்வார். அப்போது, இதற்காகவே தாசிகள் எனப்படும் பெண்கள் இருந்தனர். மகனின் நடவடிக்கைகளைப் பார்த்த பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். தன்னு டைய மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள் நாகம்மாளை திருமணம் செய்ய விரும்புவதாக ராமசாமி கூறிவிட்டார், ரெங்கசாமி…