Daily Archives: July 10, 2020

மாதம் ஒருமுறை மின்சார கணக்கீடு செய்ய கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

பன் மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எப்படி இந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்தது என்ற கேள்விக்கே சரியான விளக்கம் கிடைக்காத நிலையில், மின்கட்டணத்திற்கான அவகாசத்தையும் வழங்க மறுத்துவஞ்சிக்கிறது அதிமுக அரசு மின் கட்டணம் என்று தமிழக அரசு அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்த, திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மாதம் தோறும் கணக்கீடு செய்ய திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா பரிசோதனை…

மின் கட்டணம் குறித்து அரசு அளித்துள்ள விளக்கத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.DMK

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மின் கட்டண ரீடிங் எடுக்கப்படாமல் இருந்தது. முந்தைய மாதங்களில் கட்டிய கட்டணத்தையே கட்ட அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ரீடிங் எடுக்கப்பட்டதால் கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு அளித்துள்ள விளக்கத்தில் ‘மக்கள் நாள் முழுவதும் வீடுகளில் முடங்கியுள்ளதால் மின்சாதன பொருட்களை அதிகம் உபயோகித்திருப்பதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசின் இந்த பதில்…

இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,93,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 475 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால்…

பிரபாஸ்20 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில்…