Daily Archives: July 15, 2020

ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தவாறே காணொளி மூலம் காலை 10 மணிக்கு இந்த கூட்டத்தை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருமே காணொளி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய கருத்தாக மின் கட்டண உயர்வு குறித்து விரிவாக…

இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ராஜ்கிரண்

கந்தர்சஷ்டி கவசம் சம்பந்தமாக எதிர்மறையான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இஸ்லாமிய இறைநம்பிக்கையில் ஆழ்ந்தநம்பிக்கை, ஈடுபாடு கொண்டுள்ள நடிகர் ராஜ்கிரண் முருக பக்கதர்களின் நம்பிக்கையை பாராட்டி அவர்களுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒவ்வொருமனிதனுக்கும் எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன… இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது,…

கர்னாடகாவில் பள்ளிகளை தத்தெடுத்த தமிழ் நடிகர்

நடிகர் கிச்சா சுதீப் தனது அறக்கட்டளையின் மூலம் பல நற்பணிகளைச் செய்து வரும் நிலையில், கர்நாடகாவிலுள்ள நான்குஅரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கிச்சா சுதீப். ராஜமெளலியின் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்தபின் தமிழ் ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சுதீப் கிச்சா சுதீப் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் இந்த ஊரடங்கு காலத்தில் நம்பிக்கை தேவைப்படும் பல குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊடக வெளிச்சமின்றி செய்து வந்துள்ளார். இந்நிலையில்,…