Daily Archives: July 21, 2020

கொரோனா தடுப்பூசி – முதல் சுற்றில் நல்ல முடிவு

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.

மோடி அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி கிண்டல்

கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளால் கொரோனா…

தங்கக்கடத்தல் வழக்கில் ரகசிய தொடர்பு – நடவடிக்கை எடுக்க வேண்டும்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எர்ணாகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன், இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். அண்மையில் தற்கொலைக்கு முயன்ற ஐக்கிய அமீரக துணை தூதர் அட்டஷிவின் மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ்-க்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சுரேந்திரன் குற்றம் சாட்டி இருக்கிறார். மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ் தான் பினராயி விஜயனை சிக்க வைக்கும் கன்னி என்றும் அவர்…

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்

மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் செவ்வாய்க் கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. இவரது மகன் அசுதோஷ் டான்டன் இதனை ட்விட்டரில் அறிவித்தார். ஜூன் 11ம் தேதி லக்னோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிறுநீர் கழித்தல் பிரச்சினை இருந்ததோடு சுவாசப்பிரச்சினைகளும் இருந்தன. இந்நிலையில் இன்று காலை 5.35 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் தங்கள் இறுதி மரியாதைகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அவரது மகன் அசுதோஷ் வேண்டுகோள்…

தேனி மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதி

தேனி மாவட்டத்தில் புதிதாக மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,733 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.