Daily Archives: July 22, 2020

கந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்

கந்த சஷ்டி கவசத்தை பற்றி விமர்சித்து கறுப்பர்கூட்டம் யூடியூப் சேனலில் காணொலி வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் இருந்த செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கிடையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல காணொலிகள் இருந்ததாகக்…

இளையராஜாவுடன் முரண்பாடு கார்த்திக் ராஜாவிடம் உடன்பாடு – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம் அல்லது அருண்விஜய் நடிப்பில் அஞ்சாதே 2 ஆகிய இரண்டில் ஏதாவதொன்றைத் தொடங்க முயன்று கொண்டிருக்கிறார். அப்படங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்,…

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை – கடம்பூர் ராஜீ

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இப்போதைக்கு வாய்ப்புஇல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரையுலகினர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறக்க தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும்…

ரஜினி குடும்பம் இ-பாஸ் வாங்கினார்களா?

கேளம்பாக்கத்திற்கு செல்ல நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்துவந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு லம்போர்கினி காரை ரஜினிகாந்த் ஓட்டிச்செல்லும் புகைப்படம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. தனது இளைய மக்கள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைத்திருக்கும் பண்ணை வீட்டுக்கு…

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை விடுபட்ட கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை

மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்றைய கொரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல்காந்தி ட்வீட்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வாக்குறுதியில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். காஜியாபாத்தில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த விக்ரம் ஜோசியின் உறவுக்கார பெண்ணுக்கு அதே…

சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 4, 5 நாட்களுக்கு முன்னரே 5 லட்சம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். கடந்த மாதம் பரிசோதனைகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆணையிட்டதை தொடர்ந்து, இரண்டில்…

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மே மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக…

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தருமபுரி, சேலம் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 குறைந்த 27 டிகிரி செல்சிஸ் ஓட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நாளை வட கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்று உயர்நீதிமன்றம் கூறப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மகன் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் விடுப்பு கோரி தாய் அறுபுதம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிறையில் 50 கைதிகளுக்கு கொரோனா…

அலாஸ்காவில் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் : சுனாமி எச்சரிக்கை

அலாஸ்கா சிக்னிக்கில் இருந்து தெற்கே 75 மைல் தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு…

கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு…