Daily Archives: July 26, 2020

கனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது? கட்சியை சீர்குலைக்க முயற்சியா?

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்காத எந்த அமைப்பும் முன்னுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. அதுவும் மகளிர் உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக கருதப்படும் திமுக ஏன் மகளிர் அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடத் துடிக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, இலக்கிய அணி என்று தொடக்க காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன. மகளிர் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிமொழி பொறுப்பேற்ற பின்னர்தான் பாப்புலர்…

ஸ்டாலின்- எடப்பாடிக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளராக அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜூலை 23 தமிழகத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் அனைவருக்கும் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். “நாங்க டாக்டர் அன்புமணியை பாமகவின் முதல்வர் வேட்பாளரா அறிவிச்சோமே… எப்போ அறிவிச்சோம் சொல்லுங்க சார்?” என்று கேட்டிருக்கிறார். ‘2016 தேர்தல்ல தனியா நின்னபோது அறிவிச்சீங்க’ என்று பலரும் அதற்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ராமதாஸ், “ அன்புமணிய முதல்வர் வேட்பாளரா அறிவிச்சு 5 வருஷம் ஆச்சு. ஆனா தமிழ்நாட்டுல…

சுதந்திர தினவிழாவில் கூட்டம் கூடாது-மத்திய அரசு கடிதம்

சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 74ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விழாவில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர்…

சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்

ஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி காரைஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் ரஜினி வெளியே வருவார்’ என்ற விமர்சனத்தை உடைப்பதற்காக ரஜினியின் அனுமதியுடனே இந்தப் புகைப்படம் சமூக தளங்களில் வெளியிடப்பட்டது என கூறப்பட்டது மேலும், பண்ணை வீட்டில்ரஜினி நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் ரஜினி குடும்பத்தார் மூலம்வெளியானது இதை…

சரகா – indian scientists series – 2

மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடலுக்குள் அறிவு மற்றும் புரிதல் எனும் அகல்விளக்கோடு நுழைய வேண்டும். தவறினால் நோய்களுக்கு அவரால் சிகிச்சை அளிக்க முடியாது. அவர் முதலில் நோயாளியின் சுற்றுச்சூழல் உள்பட அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக அவருடைய சுற்றுச்சூழல்தான் நோய்க்க்கு காரணமாக இருக்கும். பிறகுதான் அவருக்கான சிகிச்சையை தெரிவிக்க வேண்டும். “நோயைக் குணமாக்குவதை விட நோய் வராமல் தடுப்பதுதான் மிகவும் முக்கியமானது.” இன்றைய மருத்துவத்தில் மேற்படி வாசகம் பாப்புலராகி இருக்கிறது. ஆனால்,…

வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1

தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் இருந்தவர் வ.ராமசாமி என்கிற வ.ரா. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்றார் அறிஞர் அண்ணா. சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி, மணிக்கொடி முதலான தமிழின் முக்கிய செய்தி மற்றும் சிற்றேடுகளில் பொறுப்பு வகித்த வ.ரா., பத்திரிகைத்துறையில் கல்கி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். வங்காள மொழியில் பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய கவிதைகளை தமிழில் வ.ரா., மொழிப்…

அவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்

அவதார் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த நாளில்வெளியிடுவது சாத்தியமில்லை என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகங்களுக்கான கதைகளை எழுதுவதில் ஜேம்ஸ் கேமரூன் கவனம் செலுத்திவந்த நிலையில் 2020 ஜனவரி மாதத் துவக்கத்தில் அவதார் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

மாரிதாஸ் மீது சென்னையில்வழக்குப் பதிவு

நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஊடகத்தினருக்கு எதிராக மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதுகுறித்து ஜூலை 5 ஆம் தேதி அந்த சேனலின் தலைமைக்கு தான் புகார் அனுப்பியிருப்பதாகவும் மாரிதாஸ் தெரிவித்தார். பின்னர், நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் வந்ததாகவும், குற்றச்சாட்டுகளை நியூஸ்18 தலைமை ஏற்றுக் கொண்டதாக அதில் கூறப்பட்டிருக்கிறது எனவும் கூறிய மாரிதாஸ், மின்னஞ்சலை காட்டினார் இவ்வாறு மாரிதாஸ் கூறிய சிறிது நேரத்தில் வினய் சர்வாகி தனது…

முருகன் சாட்சியாக நன்றி சொன்ன காமெடி நடிகர் யோகிபாபு

அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன். இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது…

விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில்…