Daily Archives: July 28, 2020

ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு? காவல்துறைக்கு எச்சரிக்கை

ஒரு கண்ணில் வெண்ணெய் .. மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில குழுஅறிக்கை வெளியிட்டுள்ளது.  மத்திய பாஜக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை கடைபிடித்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. பீமா கோரேகான் செயல்பாட்டாளர்கள் கைது, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் போன்றவற்றை அண்மைக்கால உதாரணங்களாக கூறலாம்.சங்பரிவாரத்தினர் மீது கொடுக்கப்படும் புகார்களை காவல்துறையினர் முறையாக கையாள்வது இல்லை. சமூக செயல்பாட்டாளர்…

படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு மீண்டும் பாரதிராஜா மனு

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்க திரைத்துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை இன்று சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, திரைதுறையினர் கஷ்டங்களை அமைச்சரிடம் சொல்லியிருப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள்…

புதுச்சேரி முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது. இதன்பிறகு வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மரத்தடியில் நடைபெற்றது. அன்றைக்கே சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதுஇதைத் தொடர்ந்து சட்டசபையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை…

உயரும் தங்கம் விலை ரூ.40,296-க்கு விற்பனை

தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை பார்த்து நகை வாங்குவார் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் இந்தியா முழுவதும் மூடப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட…

சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷாம் கைது

கொரானா ஊரடங்கு காரணமாக திரைதுறையினர் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது அதேபோன்று தொழில் அதிபர்களும் தொழில் நடத்த முடியாமல் முடங்கியிருந்தனர் கோடிகளில் புரளும் இவர்கள் மாலை நேரங்களில் குடியும் கூத்துமாக நட்சத்திர விடுதிகளில் பொழுதை கழித்தவர்கள்வீட்டுக்குள் அடங்கி இருக்க முடியாத விமல், சூரி ஆகிய நடிகர்கள் ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஊர் சுற்றியதாக அபராதம் கட்டினர். அதைத் தொடர்ந்து இப்போது, நடிகர் ஷாம் கைதாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக்…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை – 2020 – தமிழகத்துக்குப் பேராபத்து

சுற்றுசூழல் வரைவு அறிக்கை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கைமத்திய அரசு கோவிட் 19-ஐ கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை – 2020” ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்…

மாநில பொறுப்பில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்களாக மாற்றப்பட்ட சீனிவாசன் – நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டுவந்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் மாவட்டத்தை இரண்டாகப் பாகம்பிரித்து மாவட்டச் செயலாளர் பதவிகளை அதிமுக கட்சித்தலைமை வழங்கியுள்ளது. அவரவர் பகுதியை அவரவர் நிர்வகிப்பதன் மூலம் கோஷ்டிப்பூசலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது தலைமை. ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் சென்றனர். இருவரும்…

ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்

தமிழகத்தில் நேற்றைய (26.02.2020) நிலவரப்படி ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்தது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட தமிழக அரசு முயல்வதாகவும், உயிரிழப்புகளை மறைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 27) எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின்…

காந்தியின் தீவிர பக்தர் – Periyar Life History – 4

தனக்கு சரியென்று பட்டால் அதன் விளைவுகளை பார்க்காமல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அதேசமயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுதாட் சண்யம் பார்க்காமல் மல்லுக்கு நிற்பார். இதுதான் ராமசாமி நாயக்கரின் குணம். காந்தி பக்தராக மாறி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி விட்டார். அதன்பிறகு அவருடைய நடை உடை பாவனை அனைத்தும் மாறிவிட்டது. அவரும் அவருடைய குடும்பத்தினரும் பட்டாடை களை அணிவதில்லை. கதராடைக்கு மாறினர். விலையுயர்ந்த சிகரெட் அவர் உதட்டிலிருந்து விடை பெற்றது. அணிந்திருந்த நகைகளை உதறினார். வெற்றிலை…