Monthly Archives: August, 2020

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானர்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறிய அளவில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து…

கொரோனா முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா உதவி

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார். மேலும், சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5…

தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் எனவும், வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித் தனியே வாசல்கள் இருக்க வேண்டுமெனவும் முக்கியமாக நோய்த்தொற்று அறிகுறி…

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்ன? தடைகள் என்ன?

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதாமாதம் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை…

பென்னி குயிக் கல்லறை – இங்கிலாந்தில் சேதம்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணி குயிக்கின் இங்கிலாந்து கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னிகுயிக்குக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், ஆண்டுதோறும் திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதி மக்கள் அவருக்காக பொங்கல் இட்டு வழிபட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் பென்னிகுயிக். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள அவரது கல்லறையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில்…

டோல்கேட் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் நாளை முதல் இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இபாஸ் நடைமுறையால் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யாமல் இருந்த நிலையில் இ-பாஸ் ரத்தால் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்க சாவடிகளில்…

1 2 3 21