Daily Archives: August 12, 2020

பெண்களுக்கு சம உரிமை சட்டத்துக்கு காரணம் கருணாநிதி – மு.க ஸ்டாலின்

பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது…

அரசியல் வெடிகுண்டு வீசும் வி.பி.சு துரைசாமி

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவின் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. 2016 சட்டமன்றத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 5 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. 2021 சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே தமிழகத்தில் சூடுபிடிக்க…

இடம் மாறும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன. அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின. இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத்…

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தீர்ப்பை ஆதரித்த தமிழக முதல்வர்

உச்சநீதிமன்றம் குடும்ப சொத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று நேற்று தீர்ப்பளித்து உறுதி செய்யதுள்ளது. தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சொத்தில் சம உரிமை பெண்களுக்கு இல்லை எனவும்,…

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோளை நிறைவேற்றிய நடிகர் விஜய்

இந்தியா சேலஞ்ச்’ என்ற சவால் கடந்த சில வாரங்களாகவே தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக இருக்கிறது. சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் மரம் நடுங்கள் என்று கேட்டுக் கொண்ட ‘சேலஞ்ச்’ அங்கு மட்டுமே இருந்தது.நடிகர் மகேஷ் பாபு அவருடைய பிறந்த நாளன்று மரக்கன்று ஒன்றை நட்டு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் இந்த சேலஞ்சில் பங்கேற்கக் கேட்டுக் கொண்டார். அதன்படி நடிகர் விஜய் இன்று அவரது வீட்டில் மரக்கன்று…

கர்னாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்ற தயாராகும் பாஜக

கொரோனா தொற்று சாதாரண மனிதர்கள் முதல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பெரும்புள்ளிகள் வரை பேதமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிப் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பி.க்கள், முதல்வர்கள், கவர்னர்கள் என்று பல விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இதை வைத்து அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அம்மாநில பாஜகவின் உட்கட்சி அரசியலிலும், ஆட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பா கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர்…

பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு 9000ம் கோடி ரூபாய் கேட்கும் தமிழக முதல்வர்

தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 22,68,676 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,257 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 11) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி இந்த…

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி தான் என்றும் முதல்வர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக, திமுக என அரசியல் கட்சிகள் தற்போதில் இருந்தே தங்களது தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன. அதிமுக தமிழகம் முழுவதும் புதிய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை நியமிப்பது என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிமுகவை முதல்வர் எடப்பாடி…

இந்துக்கள் பண்டிகையும் – மு.க.ஸ்டாலினும்

கிருஷ்ண ஜெயந்தி நேற்று(ஆகஸ்டு 11) கொண்டாடப்பட்டது நிலையில், தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டு மக்களுக்கு எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ண அவதாரத்தில் கடவுள் தீயசக்திகளை வெல்வதுடன், பகவத்கீதையில் சொல்லப்பட்டுள்ள போதனைகள் வாயிலாக மனிதாபிமானத்துக்கான நல்வழியைக் காட்டுகிறார். வாழ்க்கையில் நன்மை, நல்லொழுக்கம் பேண உறுதியேற்போம். இந்த விழா நமது மாநிலத்தில் அமைதி, நட்புணர்வு, நல்லிணக்கம்,…

54 வயதில் மேல்நிலை கல்வி படிக்கும் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத்

29 வருடங்களுக்குப் பிறகு ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ பிளஸ் 1 படிக்க விண்ணப்பித்துள்ளது, கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்த தலைவரான 54 வயதாகும் ஜகர்நாத் மஹ்தோ கிரீதி மாவட்டம் தும்ரி தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவரின் கல்வித் தகுதி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் 11ஆம் வகுப்பு சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளார்…

பிரியங்கா முயற்சியால் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நேற்று ஆகஸ்டு 10 அன்றுமீண்டும் காங்கிரசையே தேடி வந்து சமரசமாகியிருக்கிறார் அம்மாநில துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்ததன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் சச்சின் பைலட். அதேநேரம் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான்…

பிக்பாஸ் படப்பிடிக்கான பணிகள் தொடக்கம்

தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம்பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால் தடைபட்டது. இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பிக்பாஸ் நான்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளது கமல்ஹாசனை வைத்து அதற்கான விளம்பரப்படம் எடுக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகிறது விரைவில் விளம்பரப்படம் எடுக்கப்படுமென்றும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர்…