Daily Archives: September 11, 2020

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை நிறுத்தம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை விவகாரத்தால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒரு தன்னார்வலரின் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதால், தடுப்பூசி பரிசோதனைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆக்ஸ்ேபார்டு – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை கண்டறிந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இந்நிலையில், ​​இந்திய மருந்துக்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பு சூழலில் பக்தர்கள் பாத யாத்திரையாக வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்

குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது…

பிச்சி போட்ட கோழி வறுவல்

தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் சீரகத்தூள் – அரை ஸ்பூன் தனியாத்தூள் – 2 ஸ்பூன் மிளகுத் தூள் – 1 ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன் கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: சிக்கனை…

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம்பிரபு

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.  அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக விக்ரம்பிரபு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டி ருக்கிறாராம். இப்படம் முழுநீளத் திரைப்படம் என்றும் இணையதளத் தொடர் என்றும் இரு தகவல்கள் இருக்கின்றன. இப்படத்தைத் தயாரிப்பு சன் நிறுவனம் என்பதால் இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இணையதள நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு…

ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏவிஎம்மின் நான்காம்…