Daily Archives: September 17, 2020

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது! கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு

மனிதன் புலம்பெயர்வதும், தங்கிய இடத்தில் தனது மிச்சங்களை விட்டுச் செல்வதும் மனிதகுல வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. எல்லைகளைத் தாண்டி மனிதன் பரவி வாழ்ந்தான். பல்வேறு காரணங்களுக்காக அவன் உலகின் பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறான். ஆனால், மொழியால், சாதியால், மதத்தால் தங்களை வேறுபடுத்தி, தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைப்பதுதான் ஆபத்தாக முடிகிறது. மனிதன் கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஜனநாயகம்தான் உயர்ந்த கோட்பாடு என்று தொல்.திருமாவளவன் பேசினார். கொரியா தமிழ்ச்சங்கமும், தென்புலத்தாரும் இணைந்து நடத்திய கொரியா தமிழ் உறவுகள் ஒரு…

கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்திய “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை” எனும் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஊடகதுறையினர் மற்றும் அறிவியலாளர்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. நிகழ்ச்சியினை அழகாக திட்டமிட்டு திறம்பட வழிநடத்திய நிகழ்ச்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ், தொழிநுட்பத்துறை முதன்மைப் பொறுப்பாளர் பொறியாளர். சகாய…

அரியர் மாணவர்கள் தேர்ச்சி மத்திய மாநில அரசுகள் பதில்தா நீதிமன்றம் உத்தரவு

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதற்கு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் ஏஐசிடிஇ தலைவர் இருவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து வருகிறார்.…

சீன ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்ட- ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்திய எல்லைப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, “ இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. . நம் மண்ணில் ஒரு அங்குல…

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்

போயஸ் இல்லத்தை அரசுடமையாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 16) முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோடு, சிலமசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்குவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து, அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டமன்றத்தில் இன்று…

புரட்டாசிக்கு பயந்த லோகேஷ் கனகராஜ் கமல் நடிக்கும் புதிய படம்

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப்போகிறார் என்றும் அப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில்,நான்…

அரியர் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை -அமைச்சர் அன்பழகன்

இன்ஜினீயரிங் உள்பட கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தியிருந்தால் அவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் மறுபக்கம், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று AICDE மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.…

செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வன் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் காளியப்பன் மகன் செல்வன். இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார். அத்துடன் செங்கோட்டையனுக்கு அரசியல் ரீதியாக உறுதுணையாகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்வன் திமுகவில் இணையப்போகும் தலைவர் செங்கோட்டையனுக்கு கிடைக்க, அவர் செல்வத்துடன் பேசிப்பார்த்துள்ளார். செல்வன் அண்ணன் மற்றும் மாமனார் மூலமாகவும் பேசியுள்ளார். ஆனால்,…

விஜய்சேதுபதியின் ரணசிங்கம் அக்டோபர் 2 ல் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய படத்தை வெளியிட இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில்நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் அக்டோபர்…