Daily Archives: September 25, 2020

எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ” பேரழிவு… என பதிவிட்டு வார்த்தை கூற முடியாத அளவிற்கு மனமுடைந்து RIP எஸ்பிபி என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். #ripspb …Devastated pic.twitter.com/EO55pd648u— A.R.Rahman (@arrahman) September 25, 2020

குரல் அரசனே உறங்குங்கள் – சிவகார்த்திகேயன் , அனிருத் டுவீட்

இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்…இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் 🙏🙏 #RIPSPBSir pic.twitter.com/FZuDkKzuLo — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2020 The voice of the nation is no more.. deeply saddened.. unforgettable and precious memories in the…

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்.

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு – இளையராஜா உருக்கம்

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது என்று எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம் தெரிவித்துள்ளார். சீக்கிரம் எழுந்து வா, நான் உன்னை பார்க்க காத்திருக்கேன் என்றேன், நீ கேக்கல எனவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்:மு.க.ஸ்டாலின்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. என கூறினார்.

அக்‌ஷ்ராவின் புதிய பட ஃபர்ட்ஸ்லுக் ரிலீஸ்

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசன் நடிப்பில் , ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிப்பில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சுரேஷ் மேனன், சித்தார்த் சங்கர், ஷாலினி விஜயகுமார், சுபா, அஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டரை நடிகரி விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ஒரு பெண் நவநாகரீக உலகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை இப்படம் சொல்லுதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டு கோழி ரசம் செய்ய வேண்டுமா…?

தேவையான பொருட்கள்: நாட்டு கோழி – அரை கிலோ சின்ன வெங்காயம் – 15 சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 தக்காளி – 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் பட்டை, லவங்கம் – தலா 1 மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் தனியாத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – அரை ஸ்பூன் கருவேப்பிலை, மல்லி இலை – தேவையான அளவு…

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயற்கின்றனர் எனவும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகபட்சமாக உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.