Daily Archives: November 27, 2020

விவசாயிகள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நடிகர் சோனு சூட், மற்றும் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு…

நிவர் புயலால் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்!! – பிரதம மோடி

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையைக் கடந்த நிர்வா புயலால் பல உயிரிழந்தனர், காயமடைந்தனர்,. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நிர்வா புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 நிவாரணத்தொகை வழங்கவேண்டுமென முதல்வ பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தற்போது ,…

புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக திமுகவின் போராட்டத் திட்டம் என்ன?

கிட்டத்தட்ட நாமும் பஞ்சாபியரும் ஒரே உணர்வுள்ளவர்கள் என்பது எனது கருத்து. இரு மாநிலங்களுமே உழைப்பில் உயர்ந்தவை. சுயமரியாதையைக் காப்பாற்றவே உருவான ஒரு மதம் என்றால் அது சீக்கிய மதம்தான். தங்களுடைய உரிமைக்கு ஏதேனும் தடை வந்தால் அதற்காக உயிரைக் கொடுத்துப் போராடும் மன உறுதியும் சீக்கியர்களுக்கு உண்டு. 1989 ஆம் ஆண்டு வாராது வந்த மாமணியாய் திமுக ஆட்சிக்கு வந்தது. சீக்கிரமே உயிரைப் பறிப்பார்கள் என்று முன்கூட்டியே தெரிந்ததோ என்னவோ, அவசர கதியில் கலைஞர் தனது சிந்தனையில்…

அதானிக்கு எதிராக போராட்டம்: இந்தியா-ஆஸி போட்டியில் பரபரப்பு

சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, 2 போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை போட்டி தொடங்கியபின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 2 போராட்டக்காரர்கள் சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்தபோது, பாதுகாப்பாளர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் ஆறாவது…

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும். இது எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்துதான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.  ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.   ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில்தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டும்தான் கிடைக்கும்

கனிமொழியிடம் உதயநிதி வாழ்த்துப்பெற்றார்!

‘கவிஞர் கனிமொழி எம்.பி.க்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீது மன வருத்தம்.’ ‘உதயநிதிக்கும் கனிமொழிக்கும் அதிகார யுத்தம்’ என பெய்ட் நியூஸ் ஊடகங்களில் தினந்தோறும் ஏதேனும் செய்திகளை உலவவிட்டபடி இருந்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளன்றும் இதே கலகச் செய்திகள் வெளிவந்தபடி இருந்தன. இன்று காலையில் உதயநிதி தன் தாய் தந்தையரிடம் வாழ்த்து பெற்றார். மாலை தனது பாட்டி ராசாத்தி அம்மையார் மற்றும் தனது அத்தை கனிமொழியிடம் சிஐடி காலனி வீட்டுக்கே சென்று வாழ்த்து பெற்றார். திமுக உயர்நிலை செயல்திட்டக்…

துளசியின் மகிமை

துளசிச் செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும். துர்தேவதைகள் அண்டாது. சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாகத்தான் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று துளசி ராமாயணம் கூறுகிறது. துளசிச் செடியை திருமாலின் அம்சம் என்றும் ஸ்ரீபுராணம் கூறுகிறது. துளசியால் திருமாலை அர்ச்சித்து வணங்குபவர்க்கு மறுபிறவி கிடையாது என்பதும் புராணம் கூறும் உண்மையாகும். பத்ம புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது. பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி…

வரலட்சுமி விரதம்

அஷ்டலட்சுமிகளில் சிறந்தவள் இந்த லட்சுமி, மங்கலநாயகி சௌபாக்கிய தேவதை குடும்ப நலனும் கணவன் அன்பும் வேண்டி பெண்டிர் இவ்விதம் மேற்கொள்வர். நல்ல கணவன் வேண்டி மணமாகாத மங்கையரும் நோன்பும் பிரசாதமான மங்கல நூல் அணிவர். சிரவண மாத சுக்கிலபட்சத்தில் பௌர்ணமிக்கு முதல் வெள்ளிக்கிழமை இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

சந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005ல் வெளியான படம் சந்திரமுகி. சொல்லப்போனால், ரஜினி கேரியரில் சந்திரமுகி மிக முக்கிய திரைப்படம். ஏனெனில், 2002ல் ரஜினிக்குப் பாபா மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தது. ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது சந்திரமுகி தான். 90’ஸ் கிட்ஸூக்கு ரஜினி இன்னும் நெருக்கமானது இந்தப் படத்தில் தான். பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், நாசர் என கச்சிதமான குடும்ப டிராமாவாக படமும் செம ஹிட். வித்யாசாகர் இசையில் வெளியான இந்தப் படத்தை, சிவாஜி…

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வந்த எஸ்.வி.சேகர்

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்டாட்டங்களைத் தவிர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென உதயநிதி கேட்டுக்கொண்டார். இதனால், பல இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் திமுகவினர். பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற உதயநிதி, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்…

வேளாண் சட்டங்களை எதிர்த்து பொங்கிவரும் விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டாவது நாளாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குப் பேரணியாகச் செல்ல முயல்வதால் அவர்கள் மீது, டெல்லி- ஹரியானா எல்லையில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘தலைநகரில் ஒன்று கூடுவோம்’ என்ற பெயரில் பேரணியாகச் சென்று டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டது. இதற்காக ஹரியானா, பஞ்சாப்…

தமிழகத்தில்அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை , நெல் ஆகியவை சாகுபடி செய்ய இருந்த நிலையில் புயலால் சேதமடைந்தன. புயல் சேதத்தைக் கணக்கிடும் பணி நடந்து வருவதாகத் தமிழக அரசு…

1 2 3