Daily Archives: December 7, 2020

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்வர் மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. எனவே திரிணாமுள் காங்கிரஸ் கட்சி இப்போதே பிரச்சாரத்திற்கு ஆயத்தாமாகிவிட்டது. இந்நிலையில் ஒன்று ஒரு பேரணியில் பேசியதாவது : நாம் சிறப்பாக வேலை செய்தாலும அவை மோசாமனது என்ற விமர்சிக்கப்பட்டுகிறது. பிரதமர் கேர் நிதி தொடர்பாப…

கைவிரல் அளவுள்ள அதிசய குரங்குகள்

இந்த உலகம் பல அதிசயங்களாலும் ஆச்சர்யங்களாலும் நிரம்பியுள்ளது. நாள்தோறும் புதிய தகவல்களைத் தருமளவு இந்தப் பூமி பெரும் பரப்புடையதாக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் உலகிலேயே சிறிய வகை குரங்கான மார்கோசெட் என்ற அரிய வகை ஒரு குக்குரங்குகள் பிறந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குக்குரங்குகள் 5 செமீ நிளமும், 10 கிராம் எடை உள்ளது. குறிப்பாக மனிதனின் விரல் அளவில் இது உள்ளதால் மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன்பாக நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் சமீப காலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மக்களுக்கான பொது பிரச்சினைகள் குறித்த பல்வேறு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் கருத்து கூறிய மதுரை கிளை நீதிபதிகள் தரிசு…

நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்தியாவின் உணவுப்படைவீரர்கள் விவசாயிகள். அவர்களுடைய அச்சங்களை நீக்கி அரசு அவர்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். #delhichallo #farmers #punjap #utterpradesh #haririyana https://twitter.com/priyankachopra/status/1335549408813826050

குரைப்பவர்கள் மீது திமுக தலைமை ஏன் சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது?

தெரு நாய் மாதிரி குரைக்கிறார்கள். மல்லுக்கு கூப்புடுறது மாதிரி ஆவேசப்படுகிறார்கள்.  ஆனா, அவுங்க ஆத்தாவை கொள்ளைக்காரினு உச்சநீதிமன்றம் சொல்லிருக்கா இல்லையான்னு ஆ.ராசா கேட்டதுக்கு பதிலே சொல்லலை…  தீர்ப்பில் அந்த வாசகத்தை ஆ.ராசா சுட்டிக்காட்டுறாரு. எந்த தீர்ப்பை, குன்ஹா அளித்த தீர்ப்பைத்தான் உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்று தீர்ப்பளித்திருக்கிறது. அதில் இருக்கிறது என்கிறார்.  இதுல என்னா கூத்துனா, ரெண்டு பேர் பிரஸ் மீட்டுக்கும் போனவனுக, அந்த தீர்ப்பு காப்பியை எடுத்துட்டுப் போயி இதுக்கு என்னா சொல்றீங்கனு மூஞ்சியில் தூக்கிப் போடல…

சென்னையில் போலீஸாரை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்!

சென்னையில் பெண் துணை இயக்குனர் ஒருவர், போலீஸாரை எட்டி உதைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று இரவு திருவான்மியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலையில் வேகமாக வந்த கார் ஒன்றில் பெண் துணை இயக்குனர் காமினி என்பவரும் அவரது நண்பரும் மது போதையில் இருந்ததாகவும் தெரிகிறது இதனையடுத்து அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது பெண் துணை இயக்குநர் காமினி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் அவர் போலீசாரை தள்ளிவிட்டதுடன், காலால்…

இந்தோனேசியாவைச் சென்றடைந்த சீனாவின் கொரோனா தடுப்பூசிகள்!!

சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1.2 மில்லியன் அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்காக தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் தங்களது சொந்த தயாரிப்பு தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளிலும் எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என்கின்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்,…

குளிர்காலத்தில் ஏற்படும் பாத வறட்சியை எப்படித் தவிர்க்கலாம்?

பொதுவாக, சருமம் வறண்டு போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். இதனை பொதுவாக நாம் ‘பித்த வெடிப்பு’ என்று நடைமுறையில் சொல்வோம். குளிர்காலத்தில் ஏற்படும் பாதவெடிப்புகள் மேலும் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில்…

முட்டை புலாவ் தயார் செய்வது எப்படி?

முட்டை புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் முட்டை – 3 கிராம்பு – 3 ஏலக்காய் – 3 பட்டை – 3 மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் நெய் – 4 ஸ்பூன் தேங்காய் பால் – 1 கப் சின்ன வெங்காயம் -…

திமுக- அதிமுக கடும் மோதல்: அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? ” எனக்…

மாதுளம்பழ ஜூஸில் இத்தனை நன்மைகளா?

பழங்கள் பொதுவாக நீரிழிவு நோயின் போது பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழ பானத்தைப் பருகுவதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை இலகுவாக குறைத்து விடுகிறது. இதில் அதிகளவான் இரும்புச் சத்துக் காணப்படுவதனால் இரத்தசோகை நோயாளருக்குச் சிறந்தது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன், போலேற் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதற்கு உதவுகின்றது. மாதுளம் பழத்தில் காணப்படும் விட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. இந்தப் பானத்தைப் பருகுவதனால் சருமம் வயதடைவதைத் தடுத்து புத்துணர்ச்சி…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்!!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் லண்டன் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் 30-க்கு…

1 2 3