Daily Archives: December 12, 2020

கமல்- சீமான் – ஓவைசி ஒன்று இணையுமா?

டிசம்பர் 3ஆம் தேதி சென்னையில் போயஸ் கார்டனில் இருக்கும் தன் வீட்டு வாசலில் இருந்தபடி, ’உயிரைக் கொடுத்தாலும் என் வாக்கைக் காப்பாற்றுவேன். அரசியல் கட்சியை தொடங்குவேன். டிசம்பர் 31ஆம் தேதி இது பற்றி அறிவிப்பேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு பிறகு… தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்ல வளரும் கட்சிகளான பலவற்றிலும் ரஜினி அறிவிப்பின் தாக்கம் எதிரொலித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்ற தனது விருப்பத்தை அவ்வப்போது…

மணல் கடத்தியவரைத் தடுத்த போலீசார்: தப்பியோடியபோது கிணற்றில் விழுந்து பலி

லாரியில் மணல் கடத்தியபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பயந்து தப்பி ஓடிய வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். மலப்புரம் புது அந்தானி பகுதியை சேர்ந்தவர் ஹாபீஸ் (வயது 25). இவர் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் உள்ள ஆற்றில் லாரி மூலம் மணல் எடுத்துவிட்டு கடத்திச்சென்றார். அந்த லாரி மோடிப்பாறை அருகே வந்தபோது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஹாபீஸ் ஓட்டி வந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். அவர் மணல் கடத்தி வந்ததால், போலீசார்…

மேலும் பின்னடைவைச் சந்திக்கும் டிரம்ப்

டெக்சாஸ் உட்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில…

ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார். இதனால், அவரது…

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்க முதலில்!-

வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். இலவங்கப் பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக…

ஓடும் காரிலிருந்து மனைவியைத் தள்ளிவிட்ட கணவன் (வீடியோ)

கோயம்புத்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து தனது மனைவியையே கணவன் தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியது. கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆர்த்தி. இவரை சில வருடங்களுக்கு முன் அருண் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அருணின் பெற்றோரும் ஆர்த்தியை மோசமாக நடத்தி வந்திருக்கின்றனர். பொறுமையிழந்த ஆர்த்தி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கே…

ஆஸ்டெக் பேரரசின் பழங்கால மண்டை ஓட்டு கோபுரம்: அதிர்ச்சியில் உறைந்த ஆய்வாளர்கள்

மெக்சிகோ சிட்டி நகரில் ஓர் அசாதாரணமான பழங்கால மனித மண்டை ஓடுகள் கோபுரத்தின் மேலதிக பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோபுரம் முன்னரே பகுதி அளவு கண்டறியப்பட்டிருந்தது. இதற்கு முன்பும் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்தில், 119 மண்டை ஓடுகள் கூடுதலாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக, மெக்சிகோவின் தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்று மையம் கூறியுள்ளது. இந்த கோபுரம் கடந்த 2015-ம் ஆண்டு, மெக்சிகோ நாட்டின் தலைநகரமான மெக்சிகோ சிட்டியில், ஒரு கட்டடத்தை புனரமைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த…

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது – எங்கு தெரியுமா?

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் டிஷர்ட் அணியக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி, பணியில் இருக்கும் போது ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட் அணியக்கூடாது. மோசமான செருப்புகளை அணியக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் மோசமான பெயரை மாற்ற முடியும் எனவும் கூறியுள்ளது. பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் – சட்டைகளை…

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வந்தநிலையில், கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வந்தது. . இந்த சுழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,26,775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால்…

மக்களுக்காக பஹ்ரைன் எடுத்த அதிரடி முடிவு

15 இலட்சம் மக்கள் தொகை கொண்ட வளைகுடா நாடான பஹ்ரைனில், அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், பிற நாடுகளில் இருந்து வந்து இங்கு வசிப்பவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களுக்கு எந்த தடுப்பூசி போடப்படும் என்பது அந்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை. மேலும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 27 மருத்துவ மையங்களில் நாள்…

தவிக்கும் 39 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக விமான சேவை முடங்கியுள்ளதால், 39 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார். அத்துடன், செப்டம்பர் 18ஆம் திகதி வரையில், 45 ஆயிரத்து 950 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா வர விரும்புகின்றனர். 5 ஆயிரம் பேர் பிரித்தானியாவில் தவிக்கின்றனர். பிற நாடுகளிலும் ஆஸ்திரேலியர்கள் சிக்கி…

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொருக்கிய ஊழியர்கள்: காரணம் இதுதான்!

8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் கர்நாடகாவில் ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நரசப்புரா என்ற இடத்தில் தைவான் நாட்டின் விஸ்டிரான் என்ற ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 8மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊதியம் வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் மூலம் நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர்…