Daily Archives: December 15, 2020

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த செட்டிநாடு குழுமம்

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செட்டிநாடு குழுமம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது. பிரபல தொழில் நிறுவனமான செட்டிநாடு குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து, சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழுமத்திற்குச் சொந்தமான 60 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் டிசம்பர் 9ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்குழுமம் 700 கோடி ரூபாய்…

எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான் கமல்ஹாசனின் புது ரூட்டு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி மதுரையில் துவங்கினார். அப்போது அரங்கக் கூட்டம் ஒன்றில் பேசிய கமல், மதுரையை இரண்டாவது தலைநகராக்க எம்.ஜி.ஆர் விரும்பியதாக குறிப்பிட்டார். அத்துடன் எம்.ஜி.ஆரின் நீட்சி நான் எனவும், மதுரையை இரண்டாம் தலைநகராக்குவேன் என்றும் விவரித்தார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறினார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம்…

சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்க பேஸ்பால் அணி: 105 வருடமாக இருந்த ‘இந்தியன்ஸ்’ பெயர் நீக்கம்!

கடந்த 105 வருடமாக பேஸ்பால் போட்டிகளில் நட்சத்திர அணியாக விளங்கி வரும் க்ளேவ்லேண்ட் அணி தனது பெயரிலிருந்து ‘இந்தியன்ஸ்’ என்ற பெயரை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பேஸ்பால், கால்பந்து போன்ற விளையாட்டுகள் பிரபலமாக உள்ள நிலையில், ஒவ்வொரு மாகாணத்தை சேர்ந்த அணிகளும் தங்கள் அணிக்கு மாகாணம் சார்ந்த சிறப்பு பெயர்களை வைத்துள்ளன. அதுபோல க்ளேவ்லாண்டை சேர்ந்த பேஸ்பால் அணி தங்களது அணி பெயரை ‘க்ளேவ்லாண்ட் இந்தியன்ஸ்’ என வைத்துள்ளன. ஆனால் சமீப காலமாக அமெரிக்காவில் இன பாகுபாடுகளை…

தமிழக அரசு சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் கோடிக் கணக்கில் நகை, பணம் மீட்பு

சென்னையில் உள்ள சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை ஒன்றை நடத்தியது. அந்தச் சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்து வங்கியின் கணக்குப் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது.…

சட்டமேலவை கூட்டத்தில் மோதிக்கொண்ட பாஜக-காங்கிரஸ் உறுப்பினர்கள்

கர்நாடக சட்டமேலவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கர்நாடகாவில் பசுவதை தடுப்புச்சட்டத்திற்கு பாஜக தலைமையிலான அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பசுவதை தடுப்பு சட்டத்திற்கு அம்மாநில சட்டமேலவையிலும் ஒப்புதல் பெறும் முனைப்பில் ஆளும் பாஜக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இன்று சட்டமேலவை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரிலேயே பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக தலைமையிலான…

சித்ராவின் கணவர் பரபரப்பு வாக்குமூலம்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:- சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஹேம்நாத் தனது சந்தேகப் பார்வையை மனைவி சித்ரா மீது திருப்பினார். அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் அடிக்கடி எந்த நடிகருடன் நெருக்கமாக…

தாயிற்கும், மகளிற்கும் ஒரே நேரத்தில் நடைபெற்ற திருமணம்!!

இந்தியாவில் தாயும், மகளும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி அரசாங்க உதவியுடன் திருமணங்கள் நடந்தது. இந்நிகழ்வில் 63 திருமணங்கள் நடந்த நிலையில், தாயும்- மகளும் தங்களது துணையுடன் இணைந்தனர். 53 வயதான பெலி தேவி என்பவரும், அவரது கடைசி மகளுமான இந்து என்பவரும் தங்களுடைய துணையை திருமணம் செயது கொண்டனர். பெலி தேவியின் கணவரான ஹரிஹர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார்,…

பாஜக ஆட்சியில் அநீதிக்கே இடமில்லையாம்…!-

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண்…

திருகோணமலையில் பறந்து கொண்டிருந்த விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

இலங்கை – திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது PT 6 என்ற பயிற்சி விமானத்துடனான தொடர்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், விமானம் இறுதியாக சூரியபுர பகுதியில் பறந்ததாகவும் இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஸ்ரீலங்கா விமனப்படையின் ஊடக பேச்சாளரை மேற்கோள் காட்டி செய்திகள்…

10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி கொடுத்தது ஒரு குற்றமா?

ஊரடங்கை மீறி பிரியாணி கடை நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கை மீறி பிரியாணி கடை நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே, திருச்சி நெடுஞ்சாலையில் புதிதாக பிரியாணி கடை திறந்தார். இந்த கடையில் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால், சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிப்பு வெளியிட்டார்.…

சந்தேகப்பட்டு மனைவியைக் கொன்ற கணவனுக்குத் தூக்கு!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி கற்பகவள்ளி. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுரேஷ் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.…

கல்வியைப் பாதியில் கைவிடும் சிறுவர்களின் பரிதாப நிலை!-

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள்…

1 2 3