Daily Archives: December 23, 2020

ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைனில் புக் செய்தால்தான் முடியும்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், வைணவ திருத்தலங்கள் 108இல் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் ஆழ்வார்கள் பதின்மர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகச் சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாள் கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஜனவரி (2021) 4ஆம் தேதி வரை…

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

சந்தானம் இப்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ்ஜெயராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. திருச்சி,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரேகட்டமாக நடந்து முடிவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். அது முடிவடைந்தவுடன் உடனடியாக ஒருபுதுப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்படத்தை இயக்கவிருப்பது ஆர்.கண்ணன். இவர்கள் இருவரும் இணைந்த பிஸ்கோத் படம்…

தயாரிப்பாளர் மீது கமல் ஆத்திரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளியிட்டது. கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தைத் தயாரிப்பது டர்மெரிக் மீடியா என்கிற புதிய பட நிறுவனம். இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கச் சொல்லிவிட்டாராம்…

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் – பாமக எச்சரிக்கை நோட்டீஸ்

தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமக சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசிவந்தார். அங்கு பேசிய தயாநிதி மாறன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு, “அத பத்தி எனக்கு தெரியாதுங்க, அவங்க…

அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் எட்டுபேருக்கு கொரானா – படப்பிடிப்பு நிறுத்தம்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்சிவா இயக்கத்தில் ரஜினி காந்த்நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு படத்துக்கான 40% படப்பிடிப்பு முடிந்திருந்தது. அதன்பிறகு, தற்பொழுது படப்பிடிப்பு துவங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துவந்தது. தேர்தல் நெருங்கும் காரணத்தினால் படப்பிடிப்பை விரைவில் முடித்திடத் திட்டமிட்டு, வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்தது. ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவந்தார் ரஜினி.இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது. ஷூட்டிங்கில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா…

02 வருடத்தில் 04 ஆவது தேர்தலை எதிர்நோக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளமையினைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் குறித்த தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி…

இந்திய அணி வீரர் சஹாலுக்கு முடிந்தது திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹால், இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூறி, புகைப்படம் பதிவிட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சஹால். டோனி முதல் தற்போது வரை வந்திருக்கும் இளம் வீரர்களிடம் இவர் தன்னுடைய ஜாலியான போக்கை வெளிப்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட இவருக்கும், கடந்த ஆண்டு…

அமெரிக்க போர்க்கப்பலை விரட்டியடித்தோம் என்கிறது சீனா!

தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடலிலுள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எனினும், குறித்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றது. மேலும் சீனாவை…

அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது: பைடன்

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவினால் உயிரிழக்க நேரிடலாம் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு மேல் உயிரிழக்கலாம். அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் கொரோனா தடுப்பு மருந்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.…

56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டியின் ரகசியம்: தோல், முடி கூட மட்கவில்லையாம்

கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிரந்தரப் பனிப் பாறைகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார். யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு இந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அந்தக் குட்டிக்கு ஜூர்…

நடனமாடிக்கொண்டே டிவியை உடைத்த சுட்டிக் குழந்தை!

சமூகவலைதளங்களில் குழந்தை ஒன்று நடனமாடியபடியே தொலைக்காட்சியை கீழே தள்ளி உடைத்தது வைரலாகி வருகிறது. இணையத்தில் இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து பதிவேற்றி வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியொவில் அந்த குழந்தை டிவியில் ஓடும் பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியில் ஆடும் குழந்தை கம்பியை பிடித்து தொங்குவது போல காட்சி இருக்க, அதைப் பார்த்து உணர்ச்சிப்…

பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியவில்லை: ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி

பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன் மீது குற்றம் சாட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 97 பக்க பமுறைப்பாட்டு பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநரிடம் கையளித்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் நிதியுதவி அறிவிப்பினை பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன் மீது குற்றம் சாட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தூதுக்குடியில்…

1 2 3