Daily Archives: January 4, 2021

பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?

பிரதமர் மோடி எல்லாமே காஸ்ட்லியாகத்தான் பயன்படுத்துகிறார். 10 லட்சம் ரூபாய் உடை, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காளான் உணவு என்று அவர் ராஜபோக வாழ்க்கையில் திளைக்கிறார். அவர் வாங்கும் சம்பளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அவருடைய மேக்கப் மேனுக்கு சம்பளம் கொடுக்கிறார். இதெல்லாம் தெரிந்த நமக்கு அவர் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் சிம்கார்டு எதுவெனறு தெரியுமா? அவர் பயன்படுத்தும் மொபைல் ஐபோன் 6 என்றும், அவர் பயன்படுத்தும் சிம்கார்டு வோடபோன் என்றும் சொல்லப்பட்டது… உடனே,…

பெண் வியாபாரி கொலை வழக்கில் சிறுவன் கைது – பரபரப்பு வாக்குமூலம்

துவரங்குறிச்சியில் பெண் வியாபாரி கொலை வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அவன் போலீசில் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுஉள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹபீபா பீவி (வயது 67). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததோடு ஜவுளி வியாபாரம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி அதிகாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையும் கொள்ளை போனது. இதுகுறித்து…

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் கூறினார். இது குறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி…

மெக்ஸிகோவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு!

மெக்ஸிகோவில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூவோ லியான் மாகாணத்தில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 32 வயது பெண் மருத்துவருக்கு திடீரென வலிப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ‘என்செஃபலோமையலிடிஸ்’ எனப்படும் மூளை தண்டுவட அழற்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, அந்த மருத்துவருக்கு ஒவ்வாமை குறைபாடு இருந்துள்ளது.…

50 ஆண்டுக்கு பிறகு ஒரு அதிசயம்

1971-ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு காலண்டர் ஒரே மாதிரி அமைந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரி அமைந்துள்ளது. இரு ஆண்டுகளின் நாள்களும் தேதிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அது போல் பண்டிகைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. அன்றைய ஆண்டில் என்னென்ன நன்மைகள் நடந்துள்ளன என்பதை மக்கள் இப்போதே கூகுளை புரட்ட தொடங்கிவிட்டனர். 1971-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் வங்காள…

தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மிரட்டும் டிரம்ப்: வெளியான ஒலிப்பதிவு

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது. ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம்…

10 வினாடிகளில் கொரோனாவை உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்

துருக்கியில் உள்ள பில்கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டயக்னோவிர் (Diagnovir) என்ற புதிய தொற்று கண்டறிதல் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, ஒருவருக்கு கொரோனா வைரஸ் நேர்மறையாக இருந்தால் 10 வினாடிகளில் முடிவைத் தரும் எனக் கூறப்படுகிறது. இந்த முறையில், ஒரு நபரின் வாயிலிருந்து டெஸ்ட் சாம்பிளை ஒரு துணியால் எடுக்கப்பட்டு, ஒரு கரைசலுடன் கலந்து பின்னர் pathogen detection chip-ல் சேர்க்கப்படும். பின்னர், இந்த சிப் ஒரு ஒளிரும் சமிக்ஞையைப் பெறுவதன்…

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம் கோவிலை இடித்து…

டெல்லி போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழப்பு: அரசாங்கம் பதில் கூற வேண்டும்

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 40வது நாளை எட்டி உள்ளது. குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில்…

ஒரே டயலாக்கில் விஜய் ரசிகர்களை கவர்ந்த ஆரி.. அப்படி என்ன தான் சொன்னார்?

எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி நடித்துள்ள அலேகா படத்தின் டிரெய்லர் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் அலேகா. பிக்பாஸ் பிரபலம ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெறும்…

20 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்?

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘சூர்யா 40’…

தனுஷ் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் விவேக்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியர் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி…