Daily Archives: March 6, 2021

நன்றி கெட்ட தம்பி – கல்கியின் சிறுகதைகள் – 4

கோவிந்தசாமி நாயக்கர் செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவர். அவர் பிறந்தபோது அவர் தந்தை இராமானுஜலு நாயக்கருக்கு ஐந்து வேலி நன்செய் நிலமும் மற்றும் தோப்புத் துறவுகளும் இருந்தன. ஆனால் அவருக்கு வயது பத்து ஆனபோது, குடும்பத்திற்குப் பொல்லாத காலம் ஏற்பட்டது. அவருடைய தம்பி தீனதயாளு பிறந்த லக்னமே அதற்குக் காரணமென சோதிடர்கள் கூறினர். ஆனால் இந்தக் கொள்கையில் நமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனெனில், தீனதயாளு பிறந்த லக்னத்திற்கும், இராமானுஜலு நாயக்கர் அவ்வூர் ஜமீன்தாருடன் ஒரு தாசி…

தங்கச் சங்கிலி – கல்கியின் சிறுகதைகள் – 3

என்னுடைய மனைவியின் நற்குணங்களை யெல்லாம் விவரிக்க வேண்டுமானால், ‘விகட’னில் இடம் போதாது. ஆகையால் துர்க் குணங்கள் இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அவளுக்கு நகைப் பைத்தியம் அசாத்தியம். ஜோதிடத்தில் பைத்திமோ அதைவிட அதிகம். என்ன காரியமானாலும் நாள் நட்சத்திரம் பாராமல் செய்ய மாட்டாள். அதிலும் அண்ணாசாமி ஜோசியர் நாள் பார்த்துச் சொன்னால் தான் அவளுக்குத் திருப்தி. ஃ ஃ ஃ என் மனைவியின் கலியாணத்தின்போது அவளுக்குக் கழுத்தில் ஒரு வடம் சங்கிலி செய்து போட்டிருந்தார்கள். சென்ற வருடத்தில்…

எஸ்.கே.மித்ரா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 13

கல்கத்தாவில் ராம் சந்திர சட்டர்ஜி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஒரு மனிதனை பலூன் மூலம் மேலே பறக்க விடும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. பலூன் மேலே பறந்தபோது, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் இருந்த 9 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அப்போது மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது, “பலூன் எப்படி மேலே செல்கிறது?” தனது பக்கத்தில் இருந்த அண்ணனிடம் அவன் இப்படிக் கேட்டான். அண்ணன் சொன்ன…

சி,வி,ராமன் -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 12

கல்கத்தாவின் பரபரப்பான பவ்பஸார் தெருவில் உள்ளது இந்தியன் அசோசியேஷன் ஆப் சயின்ஸ். நாட்டின் முன்னணி விஞ்ஞான அலுவலகம் இது. 1927ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் மாலை நேரம். அந்த அலுவலகத்தில் இருந்த பரிசோதனைக் கூடத்தில் சி.வி.ராமன் என்ற விஞ்ஞானி சந்திரசேகர் வெங்கடராமன் என்ற சக விஞ்ஞானியிடம் விஞ்ஞானக் கருவிகள் சிலவற்றை காட்டிக் கொண்டிருந்தார். அப்போது மிக விரைவாக உள்ளே நுழைந்த கே.எஸ்,கிருஷ்ணன் என்பவர், “பேராசிரியர் காம்ப்டனுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது” என்று கூறினார். ராமனுக்கு அளவில்லாத…

அபலைகள் – கல்கியின் கதைகள் – 2

புருஷ சிம்மங்களாகிய நாம் பெண் மயில்களை “அபலைகள்” என்று சொல்கிறோம். ஸ்தீரிகள் தனித் தனியாக இருக்கும்போது அவர்கள் ஒருவேளை உண்மையாகவே அபலைகளாயிருக்கலாம். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மட்டும் சேர்ந்துவிட்டால் எவ்வளவு பெரிய பெரிய காரியங்களுக்கெல்லாம் காரணபூதமாகிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களை “அபலைகள்” என்று அழைப்பது சரியா என்றே சந்தேகம் உண்டாகிறது. அப்படிப்பட்ட அபலைகளில் இரண்டு பேரின் கதையை இங்கே எழுத உத்தேசித்திருக்கிறேன். அவர்களில் ஒருத்தியின் பேர் லலிதாங்கி; மற்றொருத்தியின் பெயர் கோமளாங்கி. இவ்விரு பெண் கொடிகளும்…

இரண்டாம் சாவே ஜெய் சிங் – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 11

ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள அம்பீர் கோட்டை. இரவு நேரம். கோட்டையின் மேல் தளத்தில் மன்னரும் ஒரு நாட்டின் இளவரசியும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காதலர்கள். திருடர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த இளவரசியை, அன்றுதான் திருடர்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து வந்திருந்தார் மன்னர். வானத்தில் இருந்த நட்சத்திரங்களையும் நிலவையும் ரசித்துக் கொண்டிருந்த இளவரசிக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தனது சந்தேகத்தை மன்னரிடம் கேட்டாள். “இந்த நட்சத்திரங்களும் நிலவும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன?” மன்னரால் அவளுக்குப் பதில் சொல்ல…

ஜஹாங்கிர் – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 10

சக்கரவர்த்தி ஜஹாங்கிரின் தலைமை வேட்டைக்காரர் இமாம் விர்தி. இவரும் ஜஹாங்கிரும் ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றனர். வேட்டையாடிக் களைத்துப் போன அரசர் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். விர்தி மட்டும் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு சாம்பல் நிற கவுதாரி ஒன்றைப் பிடித்தார். அது ஆணா பெண்ணா என விர்தியால் அறிந்து கொள்ள முடியவில்லை. சக்கரவர்த்தி ஜஹாங்கிர் பறவைகளைப் பற்றி நன்கு அறிந்தவர். அவரிடம் சென்று இந்தப் பறவையைக் காட்டி, அது, ஆணா பெண்ணா என்று…

பாஸ்கரா – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 9

கர்நாடக மாநிலம் பிஜ்ஜதா பிதா (தற்போது அது பிஜப்பூர்) வில் கி.பி. 1114 ஆம் ஆண்டு பிறந்தவர் பாஸ்கரா. இவர் இரண்டாம் பாஸ்கரா என்று அழைக்கப்படுகிறார். சாதுவான தனது தந்தையிடம் இருந்து கணிதத்தை படித்தார். பின்னர் பிரம்மகுப்தாவின் நூல்கள் இவரை கவர்ந்தன. இவருடம் ஜோதிடம் என்ற அளவிலேயே தனது வானவியல் அறிவை முடக்கி வைத்திருந்தார். தனது ஆறுவயது மகளான லீலாவதிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நடைபெறாவிட்டால் தனது மகள் விதவையாகி விடுவாள்…

நாகார்ஜுனா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 8

கடவுளோடு பேசுகிறவர் என்கிற அளவுக்கு மக்களால் கதை கட்டிவிடப்பட்டவர் நாகார்ஜுனா. இவரளவுக்கு கதைகள் கட்டிவிடப்பட்டவர் யாருமே இருக்க முடியாது. ஆனால், இவர் தன்னைப் பற்றிய கதைகளால் மிகவும் சங்கடப்பட்டவர். மக்கள் இவரை சித்தர் அல்லது ரசவாதி என்று கூறினாலும், நிஜத்தில் இவர் ஒரு வேதியியல் நிபுணர். சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்றக்கூடியவர், வாழ்வின் அமுதத்தை உருவாக்கும் ரகசியத்தை அறிந்தவர் என்றெல்லாம் இவரை மக்கள் கருதினர். இவரை மக்கள் பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தனர். குஜராத்தில் உள்ள சோம்நாத்…

பிரம்மகுப்தா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 7

குஜராத் மாநிலத்தில் உள்ள பில்லமலா அல்லது பின்மால் என்ற இடத்தில் கி.பி. 598 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரம்மகுப்தா. சாபா பேரரசின் மன்னர் வியாக்ரமுகா என்பவரின் அரசவையில் ஜோதிடராக பணியாற்றினார். பிரம்மாஸ்புதசித்தாந்தம், கரணகண்டகதயகா என்ற இரு நூல்களை அவர் எழுதி இருக்கி றார். இவற்றில் முதல் நூல் மிகவும் பிரபலமானது. இவர்தான் முதன்முதலில் பூஜ்யத்தின் பயன்பாடுகளை வகைப்படுத்தினார். பூஜ்யம் என்பது ஒரு எண். அது எந்த எண்ணி லிருந்து அதையே கழித்தால் வரக்கூடிய எண் என்று இவர்…

வராஹமிஹிரா – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 6

“இது உண்மையாக இருக்க முடியுமா?” தனது அமைச்சரவையில் இருந்தவர்களை நோக்கி விக்கிரமாதித்திய மன்னர் விரக்தியுடன் கேட்டார். யாரும் பதிலளிக்கவில்லை. அரண்மனை ஜோதிடரின் கணிப்பு அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்திருந்தது. “ஆமாம் மன்னரே. அது அப்படித்தான் நடக்கும். உங்களுக்கு கசப்பாக இருந்தாலும் அது நடந்துதான் தீரும்” அமைதியை உடைத்து, அரண்மனை ஜோதிடர் கூறினார். அவருடைய குரலில் நடுக்கம் இருந்தது. அச்சம் கலந்திருந்தது. இன்னமும் அது உறுதியாகவில்லை என்றாலும் அவர் அச்சத்தில்தான் இருந்தார். “கோள்களின் இருப்பிடம் இளவரசர் தனது 18…

ஆர்யபட்டா – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 5

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. அந்தக் காலகட்டத்தில் குசுமபுரா என்ற இடத்திற்கு அருகில் நாளந்தா பல்கலைக்கழகம் என்ற பெயரில் புகழ்பெற்ற பல்கலைக் கழகம் இருந்தது. இந்தக் குசுமபுரா என்பது இன்றைய பீகார் தலைநகர் பாட்னா எனக் கருதப்படுகிறது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அன்று விசேஷமான நாள். அன்று கி.பி. 499 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி நண்பகல் 12 மணி. வளாகத்தில் பல்கலைக்கழக மணி ஒலிக்கிறது. வேத மந்திரங்கள் எதிரொலிக்கின்றன. படித்தவர்கள் நிறைந்து இருக்கிறார்கள்.…