Daily Archives: May 30, 2021

GoBackStalin டிரன்ட்யை நீக்கிய டிவிட்டர் நடந்தது என்ன ?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையை விட கோவையில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சரும் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து டிவிட்டரில் Go Back Stalin என்ற டிரண்ட் செய்யபட்டது,…

குமரி மாவட்ட மழை சேதத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டிற்கு தலா 5,000 ரூபாயும், அதேபோல் பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு…

பாஞ்சாலி மானத்தைக் காத்தது கிருஷ்ணரா? துர்வாச முனிவரா? – Athanur chozhan

மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்த திரவுபதி அல்லது பாஞ்சாலி எனப்படும் பெண்ணை துரியோதனன் சபையில் மானபங்கப் படுத்தும் போது, கிருஷ்ணர் காப்பாற்றியதாக கூறுவார்கள். ஆனால், அவளைக் காப்பாற்றியது துர்வாச முனிவர் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. இந்து புராணங்களில் இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. இதற்கு காரணம் ஒரு புராணத்திலிருந்து இன்னொரு புராணத்தை திருத்தி அமைத்து உருவாக்குவதுதான் என்கிறார்கள். ஐந்து ஆண்களுக்கு மனைவியான திரவுபதியை பாண்வர்கள் சூதாட்டத்தில் தோற்றுவிடுவார்கள். அதைத்தொடர்ந்து துரியோதனனுக்கு அவள் சொந்தமாகிவிடுவாள்.…

மீன் தொக்கு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:  மீன் துண்டுகள் – 10 (முள்ளில்லாத மீன்) தக்காளி – 4காய்ந்த மிளகாய் – 3கறிவேப்பிலை – சிறிதளவுவெங்காயம் – 7மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்ஜீரகத்தூள் –  1 ஸ்பூன்மிளகாய் தூள் – 1  ஸ்பூன்தனியா தூள் – 1 ஸ்பூன்தயிர் – 1 கப்கரம் மசாலா – 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது  1 ஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக்…

உடல்வலியை நீக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

பொதுவாக உடல் வலி என்பது நம் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளின் அறிகுறி தான். பொதுவாக இந்த உடல் வலி பெரிதாக எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை, என்றாலும் சிகிச்சைக்கு முன்னர், இந்த வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது நல்லது.  திரிகடுகு சூரணத்தை அரை கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து தினமும் காலையில் சாப்பிட உடல் வலி நீங்கி நல்ல  சுறுசுறுப்பாகும். அமுக்கிரா சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து…

என்னடா இது ஹமாம் விளம்பர நடிகைக்கு வந்த சோதனை!

ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த நடிகையை நெட்டிஸன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள். சுத்தம் சுகாதாரம் குறித்தெல்லாம் ரொம்ப பாடம் எடுக்கும் ஹமாம் சோப் விளம்பர நடிகை அப்படி என்னதான் செய்துவிட்டார்? பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படத்தில் அறிமுகமானவர் திவ்யா பரமேஷ்வரன். இவர்தான் ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். பல விளம்பரப் படங்களில் நடித்திருந்தாலும் இது அவருக்கு பேரைப் பெற்றுக் கொடுத்தது. கொரோனா விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட இந்த சோப் விளம்பரத்தில், கொரியர் பையனுக்கு ஒரு சோப் கொடுப்பதை…

ரூ.10 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.10 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும்…

செப்.18 முதல் அக்.10-க்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

14வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு.  2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.  இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்த…

ஆ.ராசா வாழ்வில் வலிமிகுந்த இன்னொரு கட்டம்! – LRJ

சமகால அரசியல்வாதிகளின் மனைவிகளில் அதிகபட்ச சோதனைகளையும் மன உளைச்சலையும் அலைச்சலையும் சந்தித்தவர். இந்திய ஒன்றிய அரசாங்கத்தையும் அதன் பிரதமர்களையும் ஒரு பத்தாண்டுகாலம் நிர்ணயிக்கும் வலிமைபெற்றிருந்த திமுக என்கிற மாநில கட்சியையும் அதன் தலைவர் கலைஞரையும் குறிவைத்து டில்லி சுல்தானியமும் அதன் சூத்ரதாரிகளான முப்புரிநூலோரும் சேர்ந்து உருவாக்கிய திட்டமிட்ட சதிவலையில் பாரதப்போரின் அபிமன்யுவைப்போல் மோசமாக சிக்கிக்கொண்டவர் ஆ ராசா. ஒட்டுமொத்த ஹிந்திய சர்வாதிகார நிறுவனங்களாலும் ராசா துரத்தித்துரத்தி வேட்டையாடப்பட்டபோது ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக ஆ ராசா ஒருபக்கம் தன்…

நவகிரக தோஷம் போக்கும் சில பரிகாரங்கள்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை  இங்கு காண்போம். காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுக்கலாம். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும். நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும். தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி  செய்யும்.  கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச்…

இன்றைய ராசிபலன் (30-05-2021)

மேஷம்:இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றுவீர்கள்.  பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  ரிஷபம்:இன்று நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.  தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய  பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள்…