Daily Archives: July 5, 2021

பேருந்து ஓட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

பேருந்து ஓட்டி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி – ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கிராம மக்களின் கோரிக்கையை நினைவேற்றும் விதமாக அதே வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை தானே ஓட்டி சென்று, சேவையை தொடங்கி வைத்தார்.

டி20 உலகக்கோப்பை ஐசிசி அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தால் அந்தாண்டுக்கான உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021ஆம் ஆண்டுக்கான தொடரை இந்தியாவில் நடத்துவது என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது தான். ஆகவே அந்தத் தொடரை வழக்கம் போல நடத்த ஐசிசியும் பிசிசிஐயும் திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரை திட்டமிட்டு நடத்த வேண்டும் என பிசிசிஐ குறியாக இருந்தது. அதற்கான பணிகளையும் சிறப்பாக செய்து கட்டுக்கோப்புடன் இந்தியாவில் தொடரின் முதல் பாதியை நடத்திமுடித்தது. ஆனால் கொரோனாவுக்கு…

ஆனி மாத அஷ்டமி பைரவர் வழிபாடு

ஆனி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி விரதம் சிவனின் வடிவமான பைரவருக்கு உரிய தினமாகும். இதனுடன் தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து, சிறப்பான வழிபாடுகளை மேற்கொண்டு பைரவரின் அருளைப் பெறலாம்! காலையில் குளித்து, வீட்டில் பைரவரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் பைரவர் சிலை இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும். காலபைரவர் சன்னிதியில் சர்க்கரைப் பொங்கல், கேசரி உள்ளிட்ட ஐந்து…

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரேமாதிரியான ஊரடங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இன்று காலை 6மணி உடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நோய்த்தொற்று வெகுவாக குறைந்த போதிலும் நோய்த்தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வருகின்ற 12-ஆம் தேதி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான ஊரடங்கு…

நல்லுறவு வேண்டுமானால் அணை கட்டாதீர்கள்”

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த அனுமதியும் பெறாத நிலையில்…

துளசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

துளசி இலை மிகவும் புனிதமானதாக நம்முடைய பாரம்பரியத்தில் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி வளர்ப்பார்கள். காலையில் வழிபாடு செய்த பிறகு வெறும் வயிற்றில் சிறிதளவு துளசி இலையை கிள்ளி மென்று சாப்பிட்டு செல்வார்கள். அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் துளசி செடி வளர்க்க பலருக்கு இடம் இல்லை. பால்கனியில் வளர்த்தாலும் பெரிய அளவுக்கு அதை கவனிப்பதும் இல்லை. துளசி மிகச்சிறந்த ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-ஃபங்கல் திறன் கொண்டது. இது புண்களை ஆற்றும் திறன் கொண்டதாகவும் உள்ளது.…

இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கு தடுப்பூசி

தமிழக சுகாதாரத்துறையிடம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமாக முகாம்களின் வாசலில் காத்திருக்கும் நிலையில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இன்று சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில்…

மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதா..?

பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் நடிகர் சூர்யா சுய விளம்பரத்துக்காக தொடர்ந்து எதிர்க்கிறார் என்று தமிழக பாஜக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியது. பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ‘ஜெய்ஹிந்த்’  வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நீட்…

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜக தீர்மானம்

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜகவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். https://twitter.com/kbcpim/status/1411901663464484864 இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும். தமிழ்நாட்டு மக்களுக்கும்,…

திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

முதல்வரான பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாளை மாலை திருவாரூர் செல்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லம், காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். ஜூலை 7ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு முதல்வரான பிறகு ஸ்டாலின் செல்வது அங்குள்ள மக்கள்…

ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட காரணங்கள்

நமது உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது. மனதில் ஏற்படும் கவலைகள், துக்கங்கள் மற்றும் பதற்றமான மனநிலை போன்றவை நமது உடல்நலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  மனம் சம்பந்தமான பிரச்சனைகள் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது எனவே மன அழுத்தம் இல்லாதவாறு நம்மை நாம்  பாதுகாத்துகொள்ள வேண்டும். புகைக்கும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு ரத்த நாளங்கள் சுருங்கி போகும் நிலை உண்டாகிறது. இது எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு…

சுவையான பிரட் சில்லி செய்ய

தேவையான பொருள்கள்:  பிரட் துண்டுகள் – 4, குடமிளகாய் – பாதி, பட்டர் – 25 கிராம், பூண்டு பற்கள் – 2,மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி , தக்காளி சாஸ் – 1 மேஜைக்கரண்டி , உப்பு – சிறிது , மல்லித்தழை – சிறிது   தாளிக்க தேவையான பொருட்கள்:  எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 செய்முறை:  வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். குடமிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும்.…