Daily Archives: July 22, 2021

இன்று மாலை சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத சூர்யா 40 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 40வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படாததால் சூர்யா 40 என அழைக்கப்பட்டு வருகிறது.…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற குற்றச்சாற்று ஏற்கனவே இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று காலை திடீரென அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த வருமான வரி சோதனை காரணமாக அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டு…