Daily Archives: August 5, 2021

தூது சொல் புல்லினமே!

தூதுநீ சொல்லி வா புல்லினமே… நெய்தல் மலரவள் வாடுமுன் தூதுநீ சொல்லி வா புல்லினமே! அலர் விழி அன்னம் காணா துயர் சூழ் நெஞ்சம் வாட… குளிர் பனி உண்ட வாடை உலர் மேனி உண்ண வீச… உயர் ஆழி ஓங்கி தாழ சதிர் ஆடும் தோணி சீற… துளிர் அச்சம் உடன் மாள வளர் காதல் தின்ற கள்வன்… ஒளிர் எழில் முக நங்கை தளிர் மேனி இணை சேர… விர்ர் ரென விரையும் சேதி…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 46. பார்வை கூர்மைக்கு சூரியகாந்தி விதைகள்

ஐந்து முதல் பதினைந்து வயது வரையுள்ள வளரும் குழந்தைகள் தினமும் பத்து அல்லது பதினைந்து சூரியகாந்தி விதைகளை உரித்து தின்பதால் கண் பார்வை கூர்மையாகும். தினமும் இரண்டு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன், இதயத்திற்கும் வலுவூட்டுகிறது. காய்ச்சற்கட்டி (Spleen) என்னும் நோய் மிகவும் கொடுமையானது. இதற்கு பப்பாளிப்பழத்தையும், சப்பாத்திக் கள்ளியின் பழத்தையும் வேளை மாற்றித் தந்து வந்தால் விரைவில் குணம் காணலாம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால்…

கலைஞர் நினைவு நாளுக்கு பெருவிழாக்கள் வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கலைஞரின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டும் என, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ‘ஆகஸ்ட் 7. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற, வைர நெஞ்சம்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 45. கல்லீரலை குணமாக்கும் கீழாநெல்லி!

அறுசுவை உள்ள ஒரே மூலிகை இதுதான். அறு சுவை கூறுகள் மூலம் நோய்களை விரட்டும் ஆற்றல் படைத்தது கடுக்காய். மலச்சிக்கலை தீர்த்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மூலிகை இது. தண்ணீர்விட்டான் (சதாவரி): பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால் – மருந்து. போதிய தாய்ப்பால் சுரப்பு இல்லாத பெண்களுக்கு லேகியமாக “சதாவரி” கை கொடுக்கும். பிரசவித்த தாய் அனைவருக்கும் இந்த லேகியம் பயன்படுகிறது. உரை மாத்திரை: கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய், சுக்கு, திப்பிலி, அக்கர காரம், வெள்ளைப்…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 14. பிகாஸோ

இவரும் ஸ்பெயின் நாட்டு ஓவியர்தான். மாடர்ன் ஆர்ட் என்ற வார்த்தைக்கு பாப்லோ பிகாஸோவைப் போல வேறு எந்த ஓவியரும் பொருந்திப் போவதில்லை. பாப்லோ பிகாஸோ 1881 அக்டோபர் 25ந்தேதி ஸ்பெயினில் உள்ள மாலாகா நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். இளம் வயதிலேயே பிகாஸோ ஒரு புத்திசாலியான மாணவராக இருந்தார். தனது 14வது வயதில் பார்சிலோனா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார் பிகாஸோ. தேர்வை சிறப்பாக எழுதியதற்காக,…

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 13. சல்வடார் டேலி

இவர் ஸ்பெயின் நாட்டு ஓவியர். 1904 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி ஸ்பெயினில் உள்ள ஃபிகூய்ரெஸ் என்ற ஊரில் பிறந்தார் சல்வடார் டேலி. இவருடைய தந்தை கௌரவமான நோட்டரியாக பணிபுரிந்தார். சின்ன வயதிலேயே டேலியிடம் ஓவியத்திறமை பளிச்சிட்டது. பத்து வயதிலேயே ஓவியப்பாடத்தை கற்கத்துவங் கினார். பிரபலமான ஸ்பானிய இம்ப்ரசனிஸ்ட் ஓவியர் ரமோன் பிச்சோட் டேலிக்கு ஆசிரியராக இருந்தார். மாட்ரிட்டில் இருந்த ராயல் அகாடமி ஆப் ஆர்ட் எனும் கலைக் கூடத்தில் ஓவியம் கற்கத் தொடங்கினார்.…

பாடபுத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் சாதி பெயர் நீக்கம்

தமிழ்நாடு அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியைக் குறிக்கும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாடநூல்களில் தமிழறிஞர்களின் பெயரின் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது.பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள் என்ற பெயரில் உ.வே.சா. எழுதிய பாடம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உ.வே.சா.…

சிக்கன் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள் சிக்கன் சமைக்க சிக்கன் – 200 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி உப்பு தண்ணீர் சிக்கன் நிரப்புதல் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி வெங்காயம் – 1 (நறுக்கிய) பச்சை மிளகாய் – 1 (நறுக்கிய) இஞ்சி – 1 (நறுக்கிய) பூண்டு – 6 பற்கள் (நறுக்கிய)…