Daily Archives: September 4, 2021

வெண் முறுக்கு

தேவையானவை:பச்சரிசி மாவு – 300 கிராம்,பொரி கடலை மாவு – 100 கிராம்,நெய் – 50 கிராம்,மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,எண்ணெய் – தேவையான அளவு,உப்பு-தேவைக்கு. செய்முறை:அரிசி மாவுடன் பொரி கடலை மாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, காய்ந்த நெய் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். தண்ணீரை விட்டுப் பிசைந்து மாவை பதமாக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்தவுடன் மாவை உருண்டையாக்கி ஒரு கண் அச்சை குழல் பிழியும் உழக்கில் போட்டு எண்ணெயில் பிழிந்து…

சொல்லாதது – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்-2

அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால்,…

தரிசனம் – ந. பிச்சைமூர்த்தி

நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம். மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா? திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை…