1967 தேர்தலில் கொடிபிடித்து கோஷம் போட்ட அனுபவம் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்
1966ல் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடியது. 5 படி அரிசிக்கு மேல் பஸ்சில் கொண்டுபோக முடியாது. அந்த அளவுக்கு அரிசிக் கடத்தலை கடுமையாக தடுத்தது காங்கிரஸ் அரசு. ஆனால், வியாபாரிகள் அரிசியையும் அத்தி யாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்து செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத் திநார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால், பஸ்சில், சைக்கிளில் அரிசி கொண்டுபோகும் சாமானியர்களை வாட்டிப் பிழிந்தது. அப்போதெல்லாம் ரேஷன் கடையே கிடையாது. அரிசிச் சோறு எல்லா வீடுகளிலும் கிடைக்காது. மூன்று…