Daily Archives: April 8, 2022

அலங்காநல்லூரில் சாலையில் ஓடிய கழிவுநீர் – விரைந்து சரிசெய்த பேரூராட்சி தலைவர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென கனமழை பெய்தது. அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் தெருவோர கடை பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அனைத்தும் சாலையில் கரை புரண்டு ஓடியது. இதையறிந்த அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ், ஆகியோர் பேருந்து நிலைய பகுதியில் பார்வையிட்டு பேரூராட்சி பணியாளர்களை வைத்து…

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் லாபகரமாக செயல்படுத்த அரசு முடிவு! – போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!

அரசு போக்குவரத்துத் துறையை லாப நோக்கத்தில் மட்டும் நடத்தமுடியாது. இன்னும் பல கிராமங்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்குகிறோம். அதை நெரிசல் இல்லாமல் போதுமான அளவுக்கு இயக்க வேண்டும். பேருந்து நேரங்களை அறிய நவீன வசதி பேருந்து இயக்கத்தை நவீனப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். பேருந்து எப்போது புறப்படுகிறது. எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிந்துகொள்ள வசதி செய்யப்படும். மினி பஸ்களை அதிகரிப்போம் அரசு போக்குவரத்துத்துறை இழப்பில்தான் இயங்குகிறது. ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வுக்கால…

எலிஸபெத் டெய்லரின் ஸ்டைல் – ஆதனூர் சோழன்

லிஸா! இந்தப் பெயர் ஒரு காலத்தில் உலகை ஆட்டிப் படைத்தது. ஆம். ஹாலிவுட்டில் நடிகை எலிஸபெத் டெய்லரின் செல்லப் பெயர்தான் லிஸா. அவருடைய காலத்தில், உலக அழகிகளில் ஒருவராக கருதப்பட்டவர். மயக்கும் நீல விழிகளில் ஆங்கிலப் பட ரசிகர்கள் மயங்கிக் கிடந்தனர். அவர்களுடைய இரவுத் தூக்கத்திற்கு துணையாக இருந்தவர் என்று கூட டெய்லரைச் சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியான பிறகு ஹாலிவுட் சினிமாவை கலக்கியவர். இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர். மூன்றுமுறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.…

லெனினுடன் சில நாட்கள் 2 – மாக்ஸிம் கார்க்கி

ஜெர்மன் சமதர்ம ஜனநாயக வாதிகளுடன்..! விசாலமான வசதிகள் நிறைந்த ஒரு அறையில் உட்கார்ந்து நாங்கள் சாப்பிட்டோம். ஜன்னல்களில் நல்ல சரிகை வேலைப்பாடமைந்த திரைகள் தொங்கவிடப் பட்டிருந்தன. நாற்காலிகளின் முதுகில் சரிகைத் துணியைப் போர்த்தி மாட்டி வைத்திருந்தார்கள். உட்காந்திருப்பவர்கள் அதில் சாயும்போது, நாற்காலிகளின் மெத்தையில் அழுக்கோ பிசு பிசுப்போ படியாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. ஏற்பாடுகள் யாவும் திருப்திகரமாகவே இருந்தன. ஒவ்வொருவரும் பக்தி சிரத்தையுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்பொழுது மிகவும் ஆழ்ந்த குரலில், ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘மால்ஸீட்’…