Daily Archives: April 13, 2022

நானும் திராவிடன்தான் – மார்தட்டுகிறார் அண்ணாமலை!

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் தன்னை ஒரு திராவிடன் என்றே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்துவிட்டார். பாஜக எதையெல்லாம் பேச கூச்சப்படுமோ அதையெல்லாம் அண்ணாமலை கூச்சமில்லாமல் பேசத் தொடங்கிவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திராவிடர்கள்தான்…

மூன்றரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3…

திராவிட நாடு குறித்து பெரியாரின் நிலைப்பாடும், அண்ணாவின் விளக்கமும்!

வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் – எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும். சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:- “சிமெண்ட்,…