Daily Archives: April 16, 2022

பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 2

(1962 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து 32 லட்சம் வாக்குகளையும், 50 சட்டமன்ற உறுப்பினர்களையும், 7 மக்களவை உறுப்பினர்களையும் திமுக பெற்றது. இது மத்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவுடன் யுத்தத்தை காரணம் காட்டி பிரிவினைத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மீது, 25-1-63இல் இராச்சிய சபையில் விவாதம் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி அண்ணா ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது. தமிழாக்கம் அண்ணா என்பது குறிப்பிடத்…

நூலக இதழ் தேர்வை ரத்து செய்வாரா முதல்வர்? குமுறல்கள் கோட்டையை எட்டுமா?

எல்லோருக்குமான அரசு. வாக்களிக்காதோரும் பாராட்டும் வகையிலான அரசு என்பதுதான் தனது இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது அரசு வெளிப்படையாக செயல்படும். எதையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் என்றெல்லாம் பறைசாற்றினார். ஆனால், நூலகத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி குறித்து பத்திரிகையாளர்களும், பதிப்பாளர்களும் மிகப்பெரிய குரல் எழுப்பி வருகிறார்கள். அதுகுறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் இதுவரை இல்லை. 300க்கு மேற்பட்ட குப்பைப் பத்திரிகைகளை ஒழித்துக் கட்டியிருப்பதாக ஒரு குப்பை பத்திரிகையாளர் விளக்கம்…

இப்படி ஒரு ஆளுநர் இனி கூடாது..! – உதயமுகம் வார இதழ் தலையங்கம்

எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குனு தனக்கு பிடிக்காத மாநில அரசுகளை கலைப்பதை மத்திய அரசுகள் வாடிக்கையாக கொண்டிருந்தன. அரசியல் சட்டத்தில் 356 பிரிவை பயன்படுத்தி, இந்தக் கலைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்களிடம் அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் ஆட்சியைக் கலைத்தார்கள். 1989 ஏப்ரல் 21 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த எஸ்.ஆர்.பொம்மை அரசாங்கத்தை பெரும்பான்மை இழந்ததாக கூறி கலைத்தார்கள். அங்குதான் வினை வந்தது.…