Daily Archives: April 23, 2022

“பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..!” – பெற்றோருக்கு டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

காலையில எட்டு டூ பத்து.. மதியானம் நாலு டூ ஆறு… *எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க…* *நீங்களே அடிக்கிற … அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக்காலத்து பள்ளிக்கூடத்து பிஞ்சுகளின் காதல்..* *பெருமைக்குரிய_பெற்றோர்களே…!* *ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.* *தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..* *காரணம், மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..* *உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை…

கற்றுக்கொடுத்த கன்னித்தீவு – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

அலங்காநல்லூர் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற கிராமத்து பள்ளிக்கூடங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மூன்றாம் வகுப்பிலேயே எழுத்துக்கூட்டி வாசிக்கவும், ஆங்கில எழுத்துகளை எழுதப் பழகவும் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எங்கள் வீட்டில் தாத்தாவும் அப்பாவும் தினத்தந்தி படிப்பார்கள். எனது அம்மாவும் எழுத்துக்கூட்டி படிக்கும். நான் முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தது தினத்தந்தியில் வந்த கன்னித்தீவும், துப்பறியும் கதையும்தான். அதுபோக, ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு துணுக்கு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு பாடல் வரி இடம்பெறும். அன்றைக்கு நான் வாசித்த கதையை நண்பர்களுக்கு சொல்வேன்.…

லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி

ரோஸா லக்ஸம்பர்க் வாசாலகத் திறமையுடன் உணர்ச்சிகரமாகவும், கடுமையாகவும், குத்தலாகவும் பேசினாள். அப்புறம் லெனின் மேடை மீது ஏறினார்; கரகரப்பான குரலில், அடித் தொண்டையிலிருந்து “தோழர்களே!” என்று முழங்கினார். முதலில் அவருடைய பேச்சு மோசமாக இருப்பது போல எனக்குத் தோன்றிற்று. ஒரு நிமிஷம் கழித்ததும் நானும், ஒவ்வொருவரும் அவருடைய பேச்சில் பரிபூரணமாக ஈடுபட்டு விட்டோம். சிக்கலான அரசியல் பிரச்சினைகள் மிகவும் லகுவான முறையில் எடுத்துக் கூறப்படுவதை அப்பொழுதுதான் நான் முதன்முதலாகக் கண்டேன். சொல்லலங்காரத்துடன் பேசவேண்டுமென்ற பிரயாசை எதுவும் இல்லாமல்…