எள்ளி நகையாடப்படும் பள்ளிக்கல்வித் துறை – LRJ
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறு கட்டும் வழக்கம் எப்போது முதல் தொடங்கியது? யார் ஆட்சிக்காலத்தில் அது ஒரு இயக்கமாய் ஊக்குவிக்கப்பட்டது? யாரால்? எதற்காக? இதையும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பாரோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? பள்ளி மாணவர்களின் கைகளில் இருக்கும் ஜாதிக்கயிறுகளை நீக்கவேண்டியது யார்? பெற்றவர்களா? ஆசிரியர்களா? இதில் யார் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும்? அமைச்சர் விளக்குவாரா? அல்லது வழிகாட்டுவாரா? பள்ளிகளில் அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஜாதி, மத, புற…