Author admin

கல்லணை அதிசயமும், நங்கவரம் பண்ணை பிரச்சனையும்! – C.N.Annadurai

காவிரியும் கரிகாலன் கல்லணையும் – நங்கவரம் பண்ணைப் பிரச்சினை தம்பி! கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான “அணை’ கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது…

நில உரிமைப் போராட்டத்தில் கலைஞருக்கு துணை நின்றவர்!

முன்னாள் முதல்வர் கலைஞர் , முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற காரணமாக இருந்தவர் கவுண்டம்பட்டி முத்து (96). இவர் தனது வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார். “கலைஞரின் நட்பை மட்டும்தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தார்கள். 1957-ல் குளித்தலை தொகுதியில் கலைஞர் தன் முதல் தேர்தலைச் சந்திக்கவும், அங்கே அவர் 8 ஆயிரத்து 296 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவும் இந்த கவுண்டம்பட்டி முத்துதான்…

ஒரு கால் விலங்கின் இசை..! – C.N.Annadurai

(அண்ணா தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய வரலாறு, உலக வரலாறு, உலகச் சிறுகதைகள் என கலந்து கொடுப்பார். அப்படி ஒரு கடிதத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சிக் கதை இது…) ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப்…

மார்க்ஸ் படத்தை வைத்து அண்ணா தனது கடிதத்தில் சொன்ன கதை!

பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி “இது என்ன?’’ என்று கேட்கிறான். இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி. “பெயர்?’’ – “தெரியாது’’. “எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? – யாரும் கொடுக்கவில்லை – ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்.’’ – “பார்த்து?’’ “இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்’’ “இவர்…

நேரு மறைவின் போது சிறையில் இருந்த அண்ணாவின் உணர்வுகள்!

நேரு மறைந்தபோது, அண்ணா சிறையில் இருந்தார். அவர் தனது சிறை டைரியில் எழுதிய குறிப்புகளில் நேருவை ஜனநாயக சீமான் மறைந்துவிட்டாரா என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார. 27-5-1964 இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, “நேரு காலமாகிவிட்டாராம்‘ என்று கூறினர். – நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது. காலை இதழிலேதான்,…

தினமலர் பேப்பருக்கு ரயில்வே நிர்வாகம் ஏஜெண்ட்டா?

தினமலர் பேப்பர் பொய்களின் பிறப்பிடம் என்பதால், அதில் வரும் செய்திகள் பல நாற்றமெடுப்பவை என்பதால் அதை சமூக வலைத்தளங்களில் தினமலம் என்றே கேலி செய்கிறார்கள். அப்படிப்பட்ட நாளிதழை ரயில்வே நிர்வாகம் பயணிகள் தலையில் கட்டி பணம் வசூலிக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த பேப்பர் விற்பனையில் ரயில்வே நிர்வாகத்துக்கு தினமலர் நிர்வாகம் கமிஷன் கொடுக்கிறதா? அல்லது பேப்பரை விளம்பரப்படுத்துவதற்காக இலவசமாகவே தினமும் பேப்பர் வினியோகிக்கப் படுகிறதா? அப்படியானால், பேப்பர் விற்கும் காசு முழுவதும் யாருக்கு போகிறது என்று…

பாக்ஸ்கான் விவகாரத்தில் வதந்தியாளர்களை தூக்கில் கூட போடலாம்! – ARULRAJ

எதற்காக இவ்வளவு ஆவேசம் என்று கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள் அதற்கு உண்டான அர்த்தம் புரியும். பாக்ஸ்கான் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தில் உள்ள இந்த நிறுவனத்தில் சுமார் 15,000 பேர் பணிபுரிகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் தங்குவதற்கு மற்றும் உண்பதற்காக விடுதிகள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இதில் நிறுவனத்திற்கே நேரடி தொடர்பு இல்லை என்கிறபோது அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை என்கிற…

எம்.ஜி.ஆரை தலைவராக வைத்துக் கொண்டு உதயநிதியை விமர்சிக்கலாமா விஜயபாஸ்கர்?

அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி அலைந்து, அவனுக்கு தெரியாமல் தூக்கிட்டு வந்து சட்டபூர்வமில்லாத பொண்டாட்டியா வச்சிருந்த எம்ஜியார் முதல்வரானார் என்ற உண்மையெல்லாம் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தெரியுமா? அந்த அளவுக்கு கூறு இருந்தால், சினிமாவில் நயன்தாராவுடன் நடித்ததை குறிப்பிட்டு, இவரெல்லாம் நாளை முதல்வரா என்று கேட்பாரா? பொதுவா அ.தி.மு.க. ஆட்களுக்கு நாகரிக அரசியலே தெரியாது. இவனுககிட்டப் போய் நாகரிக அரசியல் பண்றார் முதல்வர் ஸ்டாலின் என்று கட்சிக்காரர்கள் நொந்துகொள்கிறார்கள். எம்ஜியார் ஜெயலலிதா பின்னால் நாய் மாதிரி அலைந்த கதையெல்லாம் நாத்தமெடுத்துக் கிடக்கு.…

அதிமுகவைக் காட்டிலும் திமுக என்ன சொம்பையா?

இந்தக்கேள்வி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் இப்படித்தான் கேட்கிறார்கள். 2019 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடனடியாக கட்சி நிர்வாகத்தையும் அதிமுகவில் மாற்றிவிட்டார்கள். ஆனால், திமுகவில் தொடர்ந்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக என்றும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக என்றும் நீடிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளும் இருக்கின்றன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும்,…

புன்னப்புரா – வயலார் விவசாயிகள் போராட்டம்! 2

புன்னப்புரா – வயலார் விவசாயிகள் புரட்சி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்த கால கட்டம் அது. ஒரு புறம் நிஜாம் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து தெலுங்கானாவில் நடைப்பெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டம். மறுபுறம், மேற்கு வங்கத்தில் தெபாகா போராட்டம், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற தபால் தந்தி ஊழியர்களின் போராட்டம், இந்தியகப்பல் படை தலைவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரிய போராட்டம், ஆர்.ஐ.என் கலவரம் என ஆங்காங்கே…

அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!

கழக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி என்ற கண்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. இதில் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய…

வங்கத்தை உலுக்கிய தேபாகா போராட்டம் – விவசாயிகள் போராட்டம் 1

1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்கத்தில் மாபெரும் உழைப்பாளர் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெண்கள் என்றால் வியப்பாக இருக்கும். விவசாயத்தை பின்புலமாக கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் “நாரி பாகினி” என்ற பெண்கள் படையை முன்னின்று நடத்தினார்கள். தேபாகா என்றால் “மூன்று பங்கு” என்று பொருள். வங்கத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு, அதில் உழைப்பவர்கள் விளைச்சலில் பாதியை தந்தாக வேண்டும். ஆனால், உழைப்பவர்களுக்கு இரண்டு பங்கும், உரிமையாளருக்கு 1 பங்குமாக குறைக்க…