Author லலிதா

இந்திப் பிரச்சாரத்தை மூடிட்டு ஓடு – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

இந்தி ஒழிக, தமிழ் வாழ்க! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வழக்கமாக இந்த முழக்கங்களை தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே எழுப்புவார்கள். ஆனால், மொழித் திணிப்பால் தனது சுயத்தை இழந்து கரைந்துபோன மொழிகளுக்கு சொந்தக்காரர்களுக்கு காலம் சரியான பாடத்தை கற்பித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே இந்தியை எதிர்க்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் என்று தமிழை சொல்கிறீர்கள். ஆனால், கேரளாவோ, ஆந்திராவோ, கர்நாடகாவோ, தெலங்கானாவோ இந்தியை எதிர்க்கவில்லையே என்று ஒன்றிய ஆளும் கட்சியினர் கேட்பார்கள். வட இந்தியாவில் மராட்டியம், ராஜஸ்தான், ஒடிஸா,…

உதயமுகம் வார இதழின் 17 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 17 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 17 issue layout single

தமிழ்நாடு போக்குவரத்துதுறையின் பொற்காலம்! – உதயமுகம் வார இதழின் கவர் ஸ்டோரி

2004 ஆம் ஆண்டுக்கு முன் இந்திய ரயில் கள் நாற்றமெடுத்தவையாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ரயில்வே என்ற அந்தஸ்த்தை பெற்றிருந் தாலும், ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஆகியவற்றின் கட்டணம் உயர்வதே வாடிக்கையாக இருந்தது. 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச் சராக நியமிக்கப்பட்டார் லாலுபிரசாத் யாதவ். காலந்தோறும் நஷ்டத்திலேயே இயங்கிய ரயில்வே துறையில் லாலு என்ன செய்யப்போகிறார் என்றே பலரும் நினைத்தார்கள். ரயிலில் வசதிகளை கூட்டாமல்,…

காவல்துறை அமைச்சருக்கு கட்சிக்காரனின் கதறல் கேட்குமா?

இது ஒரு கட்சிக்காரனின் கதறல்… அப்படியே தருகிறோம்… 2022சனவரி 10 ந்தேதி ஒரு சாலை விபத்து. நான் சென்ற ஸ்கூட்டர் மீது என்பீல்டு வண்டியில் அதி வேகமாக வந்த ஒருவர் மோதி விட்டார். நான் என் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை தனியார் சிறப்பு எலும்பு முறிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டு செய்ய முடியாத சூழ்நிலையில் உடல்நிலை இருந்தால் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாட்கள் உள் நோயாளியாக இருந்து…

சொன்ன சொல்லை காப்பாற்றுவார் முதல்வர் என நம்புகிறோம் – ஜாக்டோ ஜியோ விரிவான அறிக்கை

தேர்தலுக்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும், சங்கத்துடன் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கும்படியும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநில மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், சி. சேகர், ஜெ.காந்திராஜன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் வருமாறு… தமிழக முதல்வராக திரு.…

மாமன்னன் படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு – அமைச்சராகிறார் உதயநிதி?

நெஞ்சுக்குநீதி படத்தை வெளியிட்டபிறகு, மாமன்னன் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிர்க்கிறேன். இதற்கு காரணம் அரசியலில் நான் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தது 45 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. அந்த நாட்களில் நான் அரசியலில் ஈடுபடமுடியாமல் போகிறது. எனது தொகுதியை கவனிக்க முடியாமல் போகிறது. அரசியலில் சினிமாவைக் காட்டிலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. சினிமாவில் இருப்பது எனக்கு…

மாணவர்களை மிரட்ட இன்னொரு ஆயுதம் தேவையா? – ஆதனூர் சோழன்

மோசமான மாணவர்கள், ஒழுக்கக்கேடான மாணவர்கள் காலந்தோறும் இருக்கிறார்கள்… அந்த மாணவர்களில் சிலர் காலப்போக்கில் திருந்தியிருக்கிறார்கள்… அல்லது பள்ளிக்கே வராமல் கூலி வேலைக்கோ, ரவுடியாகவோ போயிருக்கிறார்கள்… மாணவர்களை திருத்தவே பிரம்படி, முட்டிக்கால் போடுவது, பெஞ்ச் மேல நிற்க வைப்பது என்ற தண்டனைகள் இருந்தன… பெற்றோரை அழைத்துவரச் செய்தும் மாணவனை பற்றிச் சொல்லும் வழக்கமும் அந்த ரகம்தான்… இதையெல்லாம் வைத்து, கூடுதல் வருமானத்துக்காக டியூஷன் வரச் செய்து வீட்டு வேலைகளை செய்ய வைத்த ஆசிரியர்களை பார்த்தோம்… டியூஷன் வராத பிள்ளைகளை…

மதவெறியும் தேசிய வெறியும் சீரழித்த இலங்கை – சிராஜ் மஷ்ஹூர்

இலங்கை போராட்டக் களத்தில் தங்கள் எதிர்காலம் சீரழிக்கப்பட்ட கோபத்தில் கூடியிருக்கிறார்கள் மக்கள். அந்தக் கூட்டத்தில், “அபி பயய்த? (நமக்கு பயமா?)” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நே…நே… (இல்லை இல்லை..)” என்று சுற்றியிருப்போர் உரத்துச் சொல்கின்றனர். ஜனாதிபதி செயலகத்தைச் சூழவும், காலிமுகத் திடலிலும் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராட்டக் களம், முக்கியமானதொரு அரசியல் எதிர்ப்புணர்வு வடிவம். அதை ராஜபக்ஷ கம்பனி குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதுதான் அவர்களது வரலாற்றுத் தவறு. அங்கிருப்போருள் பெருந்தொகையானோர் இளைய தலைமுறையினர். தங்களது எதிர்காலம்…

ஆதீனங்களிடம் தோற்றாரா முதல்வர் ஸ்டாலின்? – ஆதனூர் சோழன்

ஆதீனங்களிடம் மண்டியிட்டது திமுக அரசு என்று குதூகலிக்கிறார்கள் சிலர். உண்மையில், ஆதீனங்களை அவர்கள் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தும் முயற்சியை மழுங்கடித்திருக்கிறது திமுக அரசு என்கிறார்கள் திமுகவினர். இந்தக் குளறுபடிகளுக்கு என்ன காரணம்? அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்று ஆராய்ந்தால், அடிப்படைக் காரணம் அதிகாரிகள்தான். அவர்களை தூண்டியது திராவிடர் கழகம்தான். திராவிடர் கழகம் எப்போதுமே, திமுக ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் அதீதமாக உரிமை எடுத்துக்கொண்டு, தங்களுடைய ஆட்சியைப் போலவே செயல்படத் தொடங்கிவிடும். சாதாரணமாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை,…

காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கு எல்.சி.குருசாமி அல்லது கலைஞர் பெயர் சூட்டுக – LR Jagdheesan

வரவேற்கப்படவேண்டிய முன்னெடுப்பு. பள்ளிகள் ஒரு சமூகத்தின் நாற்றங்கால்கள் என்கிற நோக்கில் பார்த்தால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்; மனம் மற்றும் அறிவு வலிமை மற்றும் நலனே எல்லாவகையிலும் வளமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான துவக்கப்புள்ளி என்பதால் பள்ளிமாணவர்களுக்கான எல்லா செலவுமே சமூக மூலதனமாகவே பார்க்கப்படவேண்டும். அந்த வகையில் இது ஒரு முக்கியமான சமூகநலன்/நீதியின் மைல்கல். கலைஞர் காலத்திலேயே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட திட்டம் இப்போதாவது நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த திட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு…

அம்பேத்கர் ஹீரோ, காந்தி வில்லனா? வரலாறு என்ன சொல்கிறது? – ஆதனூர் சோழன்

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இந்திய வைஸ்ராய் தனக்கு உதவியாக ஒரு நிர்வாக குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் அம்பேத்கரையும் இணைத்துக் கொண்டார். அம்பேத்கர் தொழிலாளர் நலத் துறைக்கு பொறுப்பு ஏற்றார். இந்தச் சமயத்தில்தான் வேலைவாய்ப்பு நிலையங்களை உருவாக்குவது என்று முடிவு செய்தது. அப்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. காந்தி கைது செய்யப் பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட் டிருந்தார். அந்த சூழ்நிலையில் 1943 ஆம்…

1 2 3 306