Author சிபி

அருள்நிதி நடித்த தேஜாவு பட டீசரை உதயநிதி வெளியிட்டார் – உடனடியாக வைரலானது!

அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தேஜாவு படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வெளியான் சற்று நேரத்திலேயே அந்த டீசர் வைரல் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி, ஆறுவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து தற்போது தேஜாவு பட டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…

திராவிட இயக்க வரலாறை ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? – Paneerselvan

நாம் நம் வரலாற்றைத் தொடர்ச்சியாக ஏன் பேசவேண்டும் என்றால், திரிபுகள் எப்பக்கம் இருந்தும் வரலாம் என்பதாலேதான். * தோழர் ஜீவானந்தம்-வாழ்வும் வரலாறும் – தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்! * இன்றைக்கு பெரியாரை குற்றம் சொல்லுவதற்காக ஜீவானந்தத்தை உயர்த்தி பிடித்து கொண்டாடுவது,என்ற உத்தி தமிழ்நாட்டில் சிலரால் வேண்டுமென்றே முன்னிலைப் படுத்தப்படுகிறது. * அவருடைய ஏழ்மையான வாழ்வை குற்றம் சொல்லுவதோ அவருடைய தியாகத்தை மறுப்பதோ நம்முடைய நோக்கம் அல்ல. * அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மம் பட்டி…

ரவிக்குமாரின் சங்கி ஆதரவால் விசிகவுக்குள் பூசல் வெடிக்கிறதா? – ஆளூர் ஷாநவாஸின் பழைய அறிக்கை வைரலாகிறது!

விசிக பொதுச்செயலாளராக உள்ள ரவிக்குமார் திருமாவின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு எதிர்மாறாக ஆர்எஸ்எஸ் கைக்கூலியைப் போல கருத்துகளை வெளியிட்டு, விசிகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய நடவடிக்கைகள் கூட்டணிக் கட்சிகளுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள ஆளூர் ஷநவாஸ் முன்னர் ஒருமுறை ரவிக்குமாரின் நடவடிக்கையை விமர்சித்து திருமாவுக்கு வைத்த வேண்டுகோள் அறிக்கை இணையத்தில் வைரலாகி இருக்கிறது… அதில், அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நாடாளுமன்ற…

“உத்தரப்பிரதேச பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்” – Shajath Ali

ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த இந்து ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை தமிழ்நாட்டின் ‘திராவிடன் மாடல்’ உபியில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர். அடுத்த பிரதமர் பதவிக்கு RSS தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படு தோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட…

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு….

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்…. Uthayamugam first issue

நொய்டாவில் 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற கட்டுமானநிறுவனம் ‘எமரால்டு கோர்ட்’ என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. அசல் கட்டட வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது , பொது பயன்பாட்டிற்கான நிலத்தையும்…

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அன்னை தெரஸா நிறுவனங்களுக்கு 78 லட்சம் உதவி! பாஜகவுக்கு எதிராக ஒடிஸா முதல்வர் அதிரடி!

அன்னை தெரஸா உருவாக்கிய ஆதரவற்றோர் மற்றும் தொழுநோயாளிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை மோடி அரசு நிறுத்தியது. மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் ஒடிஸாவில் உள்ள அன்னை தெரஸா நிறுவனங்கள் மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கிற்கு வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து அவர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். அத்துடன்…

சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

இந்திய – சீனா எல்லைப் பகுதியில் தனது ராணுவத்தை விரைவாக கொண்டுபோகும் வகையில் பாங்காங் த்சோ ஏரியின் குறுக்கே பாலம் கட்டுகிறது சீனா. இதை கண்டிக்காமல், கேளாக் காதினராக மோடி இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பினார். ஏரியின் வடக்கு கரையை தெற்குக் கரையுடன் இணைக்கும் வகையில் இந்த பாலத்தை சீனா கட்டுகிறது. இதுகுறித்து ஆதாரத்துடன் செய்தி வெளியாகியும் பதில் பேசாமல் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று அவர் ட்வீட்…

மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 8 சிலிண்டர்கள்! பஞ்சாப் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!

பஞ்சாப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்று அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சித்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும், ஆண்டுக்கு 8 சிலிண்டர்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுதவிர, கல்லூரி செல்லும் பெண்களுக்கு இரு சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றும், பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.15…

தம்பி ராமையா மீது போலீஸில் மோசடி புகார்!

‘தண்ணி வண்டி’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தம்பி ராமையா பங்கேற்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன், நடிகர் தம்பி ராமையா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நான் 2015ல் படம் தயாரிக்க திட்டமிட்டேன். அப்போது நடிகர் தம்பி ராமையா தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க என்னை அணுகினார். சினிமா தயாரிப்புக்கான அனைத்து பொறுப்புகளையும் அவரே ஏற்றுக் கொள்வதாக கூறினார். அவரது மகனை வைத்து 2020ல் சினிமா எடுத்து முடித்தேன். ஆனால்…

எகிப்தில் கொட்டிய பனிக்கட்டி மழை!

எகிப்து நாட்டில் வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதையடுத்து சாலைள் பனிக்கட்டிகளால் நிறைந்தது. எகிப்தில் குளிர்காலத்தின் போது பனி பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கொட்டிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் இருப்பிடத்திற்குள் முடங்கி இருந்தனர். சிறிய பந்து போன்று அதிவேகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

1 2 3 293