தமிழ்மொழியை தவாறாக பயன்படுத்தும் கேஜிஎப் படக்குழு

Share

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்து கன்னடத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘கேஜிஎப்’. வித்தியாசமான ஆக்க்ஷன் படமாக அமைந்த அப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் சேப்டர் 2’ படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதியன்று வெளியிட இருக்கிறார்கள்.

அதற்காக ஒரு பத்திரிகை போலவே ‘கேஜிஎப் டைம்ஸ்’ என்ற பெயரில் டிசைன் ஒன்றை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள்.அதில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட டிசைன் தப்பும் தவறுமாக அமைந்துள்ளது.

எழுத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகள் என கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஒரு டிசைனை செய்து அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்கள்.தெலுங்கு விளம்பரத்திலும் இது போன்றே தவறுகள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மொழி தெரியவில்லை என்பது தவறல்ல, அதைத் தெரிந்தவர்களை வைத்து தவறில்லாமல் வெளியிடுவதுதானே சிறப்பு.

பான் இந்தியா வெளியீடாக வர உள்ள ஒரு கன்னடப் படத்தின் விளம்பரத்தை இப்படி மற்ற மொழிகளில் தப்பும் தவறுமாக வெளியிடுவது தவறானது என்கிறது தமிழ் சினிமாவட்டாரம்.

Leave A Reply