அண்ணாமலையை கைது செய் என்ற ஹேஷ்டாக் வைரல்!

Share

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை வைத்து தமிழகத்தில் கிறிஸ்தவ பள்ளிகள் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தன்னை மதம் மாறும்படி யாரும் வற்புறுத்தவில்லை என்றும், பொட்டு வைக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை என்றும், ஹாஸ்டல் வார்டன் மட்டுமே தனக்கு தொடர்ந்து வேலை கொடுத்தார் என்றும் மாணவி லாவண்யா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொய்யான வீடியோவை வைத்து கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அரெஸ்ட் அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் வைரலாகி இருக்கிறது.
#arrest_annamalai #arrest_annamalai

Leave A Reply