“பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..!” – பெற்றோருக்கு டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

Share

காலையில எட்டு டூ பத்து..

மதியானம் நாலு டூ ஆறு…

*எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க…*

*நீங்களே அடிக்கிற … அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக்காலத்து பள்ளிக்கூடத்து பிஞ்சுகளின் காதல்..*

*பெருமைக்குரிய_பெற்றோர்களே…!*

*ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.*

*தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..*

*காரணம், மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..*

*உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள்* *அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்…*

*நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்… உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..*

*நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,*

*உங்கள் மகனோ மகளோ*

*உங்கள் வீட்டுக்குள்* *அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..*

*அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை….*

*இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்…*

*அதை ஸ்கிப் செய்துவிட்டு போன பிள்ளைகளைவிட* *அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அதற்குள் மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்…*

*நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில்,* *இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..*

*ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..*

*நீங்கள் கூட்டிச் செல்லாத ,ஆள் ஆரவராமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள்* *அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.*

*இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி…*

*ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்..*

*என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..*

*தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.*

*என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது.. கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது….*

*முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது…*

*உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.*

*குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.*

*முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்…*

*காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும், மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்…*

*மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்….*

*உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை கேட்டறியுங்கள்..*

*ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்…*

*இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான சில கிழஜென்மங்களின் வக்கிர குரூர முகங்களின் பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்…*

*இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..*

*குடும்பமானம் ,பிள்ளைகளின் வருங்காலம், கனவு, லட்சியம்..*

*எக்ஸட்ரா எக்ஸட்ரா வேணும்னு நினைக்கிறவங்க*

*பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..*

*ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..*

*முக்காவாசி அய்யோக்கியதனம் மொள்ளமாறி வேலை பாக்குறதுக பூராம் இந்த ஆம்பள பொம்பள பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்…*

*டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது….*

*ப்ரெண்டோட அண்ணன் அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..*

*பசங்களும் மலரில் தேனெடுக்கும் வண்டுகளை போல, வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திட்டு காரியம் முடிஞ்சதும் கழட்டி உட்டுட்டு போயிட்டே இருக்கானுங்க..*

*அடுத்த இரண்டொரு நாளில் அழுது முடித்து,*

*அடுத்த காதலுக்கு.. தன்னை புதியதாக தயார் படுத்திட்டு கெளம்பி விடுகிறார்கள் நவீன பட்டாம்பூச்சிகள்..*

*ரோஜாச்செடிகள், வேலிக்குள் இருக்கும்* *மட்டும்தான்* *பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்…*

*வேலிதாண்டினால்…,*

*அதைப் பிடிங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கரங்களும்,* *முழுச்செடியையும் மேய்ந்து திங்கும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன..*

*எனவே*

*உங்கள் வீட்டு மகள்களை ரோஜாகமகளாக கசங்காமல் பாதுகாக்கவும்.
மகன்களை சிங்கமென மிருகமாக வளர்க்காமல் நல்லமனிதனாக வளர்தெடுங்கள்..!

உண்மை கசக்கும்…..

-டிஜிபி சைலேந்திரபாபு முகநூலில் பதிவு

Leave A Reply