அருள்நிதி நடித்த தேஜாவு பட டீசரை உதயநிதி வெளியிட்டார் – உடனடியாக வைரலானது!

Share

அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தேஜாவு படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வெளியான் சற்று நேரத்திலேயே அந்த டீசர் வைரல் ஆகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி, ஆறுவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து தற்போது தேஜாவு பட டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அருள்நிதியுடன் ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத் குமார், ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Leave A Reply