ஜூஸுக்கு எப்படிப்பட்ட பழங்கள் காய்கறிகளை வாங்க வேண்டும்?
- நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளையே வாங்க வேண்டும்.
- செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும். ரசாயன கல்லைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் செரிமானக் கோளாறுகளும் உடல் உபாதைகளும் ஏற்படக் கூடும்.
- காய்கறிகளும் கூட, புதியனவாகவும் ஃப்ரஷ்ஷாகவும் இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகள் மற்றும் கீரைகள் நல்ல பச்சையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது.
- எப்பொழுதும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமான நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். அழுகிய, கெட்டுப்போன பகுதிகளை வெட்டி எறிய வேண்டும்.
- பழங்களில் சாறு எடுத்தவுடன் குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குடிக்கக் கூடாது.
- சாறு எடுத்தபின் சாறு எடுக்கும் இயந்திரத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
- கர்ப்பிணிகளும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் 250ல் இருந்து 350 மில்லி வரை பழம் அல்லது காய்கறி சாறை குடிக்கலாம். ஒரு நாளுக்கு இரண்டு தடவையாக பிரித்து குடிக்கலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் கொடுக்கலாமா?
- பச்சிளம் குழந்தைகளுக்கு ஜீரண மண்டலம் எளிதில் பாதிக்கக்கூடியது.
- செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகும்.
- அதனால்தான் குழந்தைகளுக்கு திரவ ஆகாரத்தை மட்டுமே உட்கொள்ள கொடுக்கிறோம்.
- ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு திட உணவு தருவதில்லை.
- ஆறு மாதங்களுக்கு பிறகு மசித்த உணவுகளைக் கொடுக்க தொடங்குவோம். அதற்கு பதிலாக சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை சாறுகளை கொடுக்கலாம்.
- குழந்தைக்கு பிடிக்காத, அல்லது குடிக்க மறுக்கும் எந்த பழச் சாறையும் வற்புறுத்தி கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு கொடுக்கும் பழச்சாறுகள் சிறிது வெதுவெதுப்பாக இருத்தல் நல்லது. சாறுகளை மதியம் அல்லது மாலை நேரங்களில் கொடுக்கலாம். அப்போது, குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். கூடுமானவரை மறுக்கமாட்டார்கள்.