நானும் திராவிடன்தான் – மார்தட்டுகிறார் அண்ணாமலை!

Share

அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் தன்னை ஒரு திராவிடன் என்றே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்துவிட்டார். பாஜக எதையெல்லாம் பேச கூச்சப்படுமோ அதையெல்லாம் அண்ணாமலை கூச்சமில்லாமல் பேசத் தொடங்கிவிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆளமுடியும். திமுக, அதிமுக வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான்.

நான் திராவிடன். பா.ஜ.கவினர் மண்ணை சார்ந்த தொழில் செய்கின்றோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண்சார்ந்த தொழில் செய்கின்றனர். துபாயில் , வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். வரும் 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும் . தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம் . ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

சட்டமன்றத்தில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.கவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, பா.ஜ.கவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. பீஸ்ட் ரெவியூ பார்த்தேன். நல்லா இருப்பதாக சொல்கின்றனர். சினிமாவில் விஜய் நடிகராக பேசுகின்றார். ஏ.ஆர்.ரகுமான் அவருடைய படமாக தமிழன்னை படத்தை வெளியிட்டு இருக்கின்றார். கருத்து சுதந்திரம் அடிப்படையில் அவர் பதிவிட்டு இருக்கின்றார். எங்கள் எதிரி திமுக மட்டுமதான் என்று குறிப்பிட்டார்.

Leave A Reply